twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நம்மை அடிக்க ஆள் அனுப்பிய இம்ரான் கான் நல்லவராப் போயிட்டாரோ?: சதீஷ்

    By Siva
    |

    சென்னை:பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இந்தியர்கள் தலையில் வைத்து கொண்டாடுவது நடிகர் சதீஷுக்கு பிடிக்கவில்லை.

    பாகிஸ்தானியர்களிடம் சிக்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்பியதை பார்த்து இந்தியர்கள் அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் நடிகர் சதீஷ் அபிநந்தன் பற்றி ட்வீட் போட அது விவாதத்தில் முடிந்துள்ளது.

    சதீஷ்

    #அபிநந்தன் நீங்கள் இந்தியாவின் பெருமை... நமது ராணுவத்தின் பெருமை.... உங்கள் வீரத்தையும் நாட்டுப்பற்றையும் பார்த்து நமது நாட்டை தரக்குறைவாக பேசுபவர்கள் திருந்த வேண்டும். #ஜெய்ஹிந்த் 🇮🇳 🙏🏻 #WelcomeBackAbhinandan என்று சதீஷ் ட்வீட் செய்தார்.

    பாகிஸ்தான்

    சதீஷின் ட்வீட்டை பார்த்த ஒருவர், பாகிஸ்தானை யாரும் ஆதரிக்கவில்லை..பிடிபட்ட வீரர் அபிநந்தனை இரண்டே நாட்களில் விடுவித்த அந்நாட்டு பிரதமரின் நடவடிக்கை மட்டுமே ஆதரிக்கப்படுகிறது...! என்றார். அதை பார்த்த சதீஷ், நம் நாட்டை தாக்க வந்த பாகிஸ்தான் விமானத்தை விரட்டி அடித்துச் செல்லும் போது தான் அபிநந்தன் அங்கே விழுந்திருக்கிறார். அவரை விடுவித்த பாகிஸ்தானை பாராட்டும் தாங்கள் நம்மை அடிக்க ஆள் அனுப்பிய இம்ரான்கான் நடவடிக்கையை என்னவென்று சொல்வீர்கள்?!? என்று கேள்வி எழுப்பினார்.

    பாஜக

    இப்டி ஏதாச்சும் கேட்டீங்கனா உங்களயும் பிஜேபி ஆளுனு கோத்துவிட்டருவாங்க...பாத்து ப்ரோ.... என்று ஒருவர் சதீஷுக்கு அறிவுரை வழங்க அவரோ, நம் தாய் நாட்டை நேசிக்கும் ஒரு சாதாரண மனிதன் அவ்ளோதான் ப்ரோ. நன்றி என்று பதில் அளித்துள்ளார்.

    மோடி

    மோடி

    அபிநந்தனை விடுதலை செய்ய உத்தரவிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராட்டிய இந்தியர்கள் நம் பிரதமர் மோடியை விளாசினார்கள். இந்நிலையில் தான் சதீஷ் இப்படி ட்வீட் செய்தார்.

    English summary
    Actor Sathish is not happy with the way Indians praising Pakistan PM Imran Khan and blasting our PM Modi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X