»   »  சோனியாவுக்கு பிளேடு வெட்டு

சோனியாவுக்கு பிளேடு வெட்டு

Subscribe to Oneindia Tamil

தனுஷை அவரது ரசிகர்கள் அன்பு மிகுதியில் கையை உடைத்தது போல, அவருடன் காதல் கொண்டேனில் நடித்தசோனியா அகர்வாலை அவரது ரசிகர்கள் ஆர்வ மிகுதியால் பிளேடால் வெட்டினர்.

ஸ்ரீகாந்த்- சோனியா அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் சதுரங்கம். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னைபெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. இத்தகவல் அறிந்ததும் திருவான்மியூர், பெசன்ட் நகர் பகுதி குப்பத்துமக்கள் அங்கு கூடிவிட்டனர்.

ஒரு கட்டத்தில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகி, தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் படப்பிடிப்பை பாதியிலேயே ரத்துசெய்தனர். சோனியா அகர்வால் காரில் ஏறி, அந்த இடத்தைவிட்டு கிளம்ப முயன்றார். ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர்.

அவரை ரசிகர்கள் தொடுவதும், சீண்டுவதுமாக இருந்தனர். அப்போது ஒருவர் சோனியாவின் ஜாக்கெட்டைப்பிடித்து கிழித்துவிட்டார். இன்னொருவர் பிளேடால் கீறியுள்ளார். மேலும் அசம்பாவிதம் நடப்பதற்குள்படப்பிடிப்புக்குழுவினர் இடையே புகுந்து, சோனியாவைக் காப்பாற்றி, காரில் ஏற்றி அனுப்பினர். அதன்பின்சோனியா ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இது குறித்து படத்தயாரிப்பாளர் துரைராஜிடம் கேட்டபோது, அவ்வாறு சம்பவம் நடைபெறவே இல்லை என்றுமறுத்தார். சூட்டிங் நடந்த இடத்தில்தான் நான் இருந்தேன், சோனியா அகர்வாலிடம் யாரும் எந்தக் குறும்பும்பண்ணவில்லை என்கிறார் அவர்.

உண்மையில் என்ன நடந்தது என்பதை சோனியாதான் சொல்ல வேண்டும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil