»   »  பிரபு சாலமன் - தனுஷ் படம்... சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது

பிரபு சாலமன் - தனுஷ் படம்... சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபு சாலமன் - தனுஷ் இணையும் புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

‘மூன்றாம் பிறை', ‘கிழக்குவாசல்', ‘இதயம்', ‘பார்த்திபன் கனவு', ‘எம் மகன்' போன்ற குறிப்பிடத்தக்க படங்களைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ், ஒரு இடைவெளிக்குப் பிறகு படத்தயாரிப்பில் இறங்கியுள்ளது.

Sathya Jothi films announces Prabhu Solomon - Dhanush project

டிஜி தியாகராஜனின் மகன்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் ஆகியோர் இந்தப் படம் மூலம் தயாரிப்பாளராகிறார்கள். டி.ஜி.தியாகராஜன் வழங்கும் இந்தப் படத்தில் ஜி.சரவணன் மற்றும் செல்வி தியாகராஜன் இணைத் தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.

பிரபு சாலமன் - இசையமைப்பாளர் டி.இமான் கூட்டணி இதிலும் தொடர்கிறது.

Sathya Jothi films announces Prabhu Solomon - Dhanush project

இன்னமும் பெயரிடப்படாத இந்த படத்துக்கு ஒளிப்பதிவு - வி.மகேந்திரன், படத்தொகுப்பு - தாஸ் (டான் மேக்ஸ்). நிர்வாகத் தயாரிப்பு - ராகுல். மக்கள் தொடர்பு - நிகில்.

படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இப்படத்தின் கதாநாயகி மற்றும் இதர நடிகர் - நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.

English summary
Sathya Jothi Films officially announced its next production with Prabhu Solomon and Dhanush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil