»   »  'விஜய் படம் கூட வேண்டாம்'- பாகுபலி 2-க்காக 100 நாட்கள் ஒதுக்கிய சத்யராஜ்!

'விஜய் படம் கூட வேண்டாம்'- பாகுபலி 2-க்காக 100 நாட்கள் ஒதுக்கிய சத்யராஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலி இரண்டாம் பாகத்துக்காக 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் நடிகர் சத்யராஜ். இதற்காக அவர் விஜய் பட வாய்ப்பையும் மறுத்துவிட்டாராம்.

பாகுபலி படத்தில் ஹீரோக்கள் பிரபாஸ், ராணாவை விட அதிகம் பேசப்பட்டது சத்யராஜின் கட்டப்பா பாத்திரம்.

இத்தனைக்கும் சில காட்சிகளில்தான் வருகிறார். ஆனால் அவரது முக்கியத்துவம் படம் முழுக்க இருப்பது போல காட்சிகளை வைத்திருந்தார் இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி.

கட்டப்பா

கட்டப்பா

பாகுபலியை கொன்றதே நான்தான் என்று கட்டப்பா கூறுவது போல முதல் பாகம் முடிக்கப்பட்டிருப்பதால், எதற்காக பாகுபலியை கட்டப்பா கொன்றார்? என்ற கேள்வி பாமர ரசிகன் முதல் பிரதமர் நரேந்திர மோடி வரை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் இன்றைக்கு.

ராஜமௌலி

ராஜமௌலி

அத்தனை அதிமுக்கியமான வேடம் என்பதால், இப்போது உருவாகும் இரண்டாம் பாகத்தில் நடிக்க அதிக நாட்கள் கால்ஷீட் வேண்டும் என சத்யராஜிடம் முன்பே கூறிவிட்டாராம் ராஜமௌலி. எனவே 100 நாட்கள் வரை கால்ஷீட் தந்துள்ள சத்யராஜ், தேவைப்பட்டால் மேலும் சில நாட்கள் நடிக்கவும் சம்மதித்துள்ளாராம்.

வேண்டாம் விஜய் படம்

வேண்டாம் விஜய் படம்

இப்போது குணச்சித்திர நடிகராகிவிட்டதால் பல படங்களில் நடித்து வருகிறார் சத்யராஜ். அட்லீ இயக்கும் விஜய் படத்தில் நடிக்க அவருக்கு பெரும் சம்பளம் தர முன்வந்தபோதும் அதை மறுத்திவிட்டாராம் சத்யராஜ்.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

'பாகுபலி 2-ம் பாக படப்பிடிப்புக்கு அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என எஸ்எஸ் ராஜமௌலி கூறியிருக்கிறார். நானும் சம்மதித்து ஒப்பந்தம் செய்துள்ளேன். எனவே வேறு எந்தப் படத்திலும் இப்போதைக்கு நடிக்க முடியாது' என்று கூறிவிட்டாராம்.

பிரபாஸ் 3 ஆண்டுகள்

பிரபாஸ் 3 ஆண்டுகள்

இந்தப் படத்தின் முதல் பாகத்துக்காக நடிகர் பிரபாஸ் 2 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்திருந்தார். இரண்டாம் பாகத்துக்காக மேலும் 1 ஆண்டு கால்ஷீட் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Veteran actor Sathyaraj, who won critical acclaim for his performance as the loyal warrior Kattappa in SS Rajamouli's 'Baahubali', has allocated over 100 days for the shoot of the remaining portion of the second part of the franchise.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil