»   »  கோழிக்கறி சமைக்கும் சத்யராஜ்! உங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையே!!

கோழிக்கறி சமைக்கும் சத்யராஜ்! உங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையே!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹீரோக்களின் அப்பாவாகவோ, ஹீரோயின்களின் அப்பாவாகவோ நடிக்க சம்மதிக்காத சத்யராஜ் இப்போதெல்லாம் நாட்டுக்கோழியை விரட்டி பிடித்து அழகாக சமைத்து கொடுக்கிறார் ஆச்சி சமையல் மசாலாவிற்காக.

ஈமுகோழி என்ற வில்லங்க விளம்பரத்தில் நடித்த சத்யராஜ், கொஞ்ச நாளைக்கு முன்னர் அஞ்சப்பர் ஹோட்டல் விளம்பரத்தில் நடித்தார். அதுவும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஹோட்டலுக்கு சரத்குமார் விளம்பர தூதுவராக, உடனே அஞ்சப்பர் ஹோட்டலின் தூதுவரானார் சத்யராஜ்.

இப்போதோ ஆச்சி சிக்கன் மசாலாவிற்காக நாட்டுக்கோழியை விரட்டிக்கொண்டிருக்கிறார். அதை பிடித்து அடித்து சுடச்சுட சமைத்து ருசியோடு பரிமாறுகிறார்.

வில்லனாக தொடங்கி

வில்லனாக தொடங்கி

சினிமாவில் எஸ் பாஸ் என்று சிலகாலம் சொல்லி வந்த சத்யராஜ் காக்கிச் சட்டையின் தகடு... தகடு... பிரபலப்படுத்தியது. என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே

ஹீரோ சத்யராஜ்

ஹீரோ சத்யராஜ்

வில்லனாக நடித்தவர்களை ஹீரோவாக ஏற்றுக்கொண்ட காலம் அது. சத்யராஜூம் ஹீரோவாக அந்த அசால்ட் நடிப்பை அப்படியே ஏற்றுக்கொண்டனர் தமிழ் ரசிக கண்மணிகள்.

பாலு தேவராக

பாலு தேவராக

பாரதிராஜாவின் வேதம் புதிது படத்தில் பாலு தேவராக நடித்து அசத்தியிருப்பார் சத்யராஜ். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கூட சத்யராஜைப் பார்த்து வாய்யா பாலுத் தேவரே என்றுதான் அழைப்பாராம்.

அமைதிப்படை அமாவாசை

அமைதிப்படை அமாவாசை

மணிவண்ணன் இயக்கத்தில் அமைதிப்படை படத்தில் அமாவாசையாக நடித்து அப்ளாஸ் வாங்கிய சத்யராஜ், அல்வா கொடுத்து அசத்திய காட்சி இன்றைக்கும் பிரபலம்.

கட்டப்பா

கட்டப்பா

பாகுபலியில் அடிமை கட்டப்பாவாக நடித்த பிறகு இப்போது ரசிகர்கள் அனைவருமே சத்யராஜை கட்டப்பாவாகவே பார்க்கின்றனர். பாகுபலியை ஏன் கட்டப்பா கொலை செய்தார் என்பதுதான் சமூக வலைத்தளங்களின் முக்கிய விவாதமே. பாகுபலியில் நடித்து இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார் சத்யராஜ்.

கோழி பிடிக்கிறாரே

கோழி பிடிக்கிறாரே

அதே சத்யராஜ் இன்றைக்கு கோழி பிடித்து குழம்பு வைக்கிறாரே... உங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையே.... என்கின்றனர் சத்யராஜ் ரசிகர்கள். குழம்பு எல்லாம் ருசியாத்தான் இருக்கும். பாகுபாலியை ஏன் கொலை பண்ணீங்க அப்படீங்கிற ரகசியத்தை மட்டும் கொஞ்சம் சொல்லிட்டா நல்லா இருக்கும் சொல்வீங்களா?

English summary
Actor Sathyaraj is cooking very well like acting very nice on screen
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil