»   »  2 வருஷமா குடும்பத்திற்கு தெரியாமல் ரகசியம் காத்த சத்யராஜ்: இது தான் ஃபர்ஸ்ட் டைமாம்!

2 வருஷமா குடும்பத்திற்கு தெரியாமல் ரகசியம் காத்த சத்யராஜ்: இது தான் ஃபர்ஸ்ட் டைமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற ரகசியத்தை தனது குடும்பத்தாரிடம் கூட தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்திருக்கிறார் சத்யராஜ்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்று கேட்டனர்.

அந்த கேள்விக்கு கடந்த மாதம் வெளியான பாகுபலி 2 படத்தில் தான் பதில் கிடைத்தது. இந்நிலையில் இது குறித்து சத்யராஜின் மகள் திவ்யா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

கதை

கதை

எனக்கு 10 வயது இருக்கும்போதில் இருந்து அப்பா அவர் நடிக்கும் படங்களின் கதையை என்னிடம் கூறி வருகிறார். தன்னுடைய படங்கள் குறித்து அம்மா, சிபி மற்றும் என்னிடம் கருத்து கேட்பார்.

பாகுபலி

பாகுபலி

அப்பா பாகுபலி கதையை ஒரு வரியில் சொன்னபோது பிடித்திருந்தது. ஆனால் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அப்பா நீண்ட காலம் ஹைதராபாத்தில் இருக்க வேண்டும். அதனால் அவர் அந்த படத்தில் நடிக்க வேண்டுமா என்று நினைத்தேன்.

அப்பா

அப்பா

அப்பாவை பிரிந்து நீண்ட நாட்கள் இருந்தது இல்லை. அவர் பாடல் காட்சிகளுக்காக அவுட்டோர் ஷூட்டிங் செல்வார். அதுவும் ஒன்று அல்லது 2 வாரங்களில் முடிந்துவிடும்.

கட்டப்பா

கட்டப்பா

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்று அப்பா எங்களிடம் கூறவில்லை. நாங்களும் கேட்கவில்லை. நானும், சிபியும் அப்பா முன்பு அமர்ந்து கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்று கணித்தாலும் அவர் சிரிப்பாரே தவிர எதுவும் சொல்ல மாட்டார்.

ரகசியம்

ரகசியம்

அப்பாவும், நானும் பெஸ்ட் பிரெண்ட்ஸ். எங்களுக்குள் எந்த ரகசியமும் இல்லை. அவர் என்னிடம் கூறாமல் இருந்த ஒரே ரகசியம் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பது தான்.

படம்

படம்

பாகுபலி 2 படம் பார்த்த பிறகே கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என தெரிந்து கொண்டேன். படத்தை இதுவரை இரண்டு முறை பார்த்துள்ளேன் என்று திவ்யா தெரிவித்துள்ளார்.

English summary
Divya Sathyaraj said that her father hasn't revealed to them as to why did Kattappa kill Baahubali?. He kept that as a secret for two years, she added.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil