»   »  நீட் குழப்பம், மோசடி மருந்து கம்பெனிகள், லஞ்சம் - கொலை மிரட்டல்! - மோடிக்கு சத்யராஜ் மகள் கடிதம்

நீட் குழப்பம், மோசடி மருந்து கம்பெனிகள், லஞ்சம் - கொலை மிரட்டல்! - மோடிக்கு சத்யராஜ் மகள் கடிதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த வாரம் சில வெளி நாட்டு மருத்துவ நிறுவனங்கள் பிரபல மருத்துவரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் தவறான மருந்தை பிரயோகிக்க மறுத்ததை தொடர்ந்து அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதும், அதை தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் செய்ததும் அறிந்ததே.

இதை தொடர்ந்து திவ்யா சத்யராஜ் இன்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இந்த வகையான அங்கீகரிக்கப்படாத, அபாயகரமான மருந்துகளை தடை செய்யுமாறு கேட்டு கொண்டார்.

Sathyaraj's daughter letter to Modi

இதை தொடர்ந்து அவர் அதே கடிதத்தில் நீட் நுழைவு தேர்வினால் வரும் விளைவை பற்றியும், மருத்துவ உலகில் பெருகி வரும் அசிரத்தை பற்றியும் , நுழைவு தேர்வில் நடக்கும் அநியாயங்கள் பற்றியும் எழுதி உள்ளார்.

திவ்யா சத்யராஜ் டாக்டராகப் பணியாற்றுகிறார் என்பதால் குறிப்பிட்ட மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க சில அமெரிக்க மருந்து கம்பெனிகள் வற்புறுத்தியுள்ளன. அதற்காக அவருக்கு லஞ்சம் தர முனைந்திருக்கிறார்கள். அவர் வாங்க மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

அதேபோல நீட் தேர்வில் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால் மாணவர்கள் பெரும் குழப்பத்துக்குள்ளானதாகவும், அதனால் பல முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

English summary
Sathyaraj's daughter Divya's open letter to Modi on NEET issues

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil