இனிமேல் இதைப் பண்ணுங்க.. இல்லாட்டி நாறிப்போயிரும்.. தனுஷ்க்கு முன்னாடியே போட்டுடைத்த சத்யராஜ்!
சென்னை: தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், பார்த்திபன், ராஜ்கிரன், அருண் விஜய், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்நிலையில் படத்தின் டிரைலர் கோவையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய, சத்யராஜ் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது அவர் பேசுகையில், " ஏதோ நம்மூருக்கு வரங்காட்டி, டோபா எல்லாம் வெச்சுக்கிட்டு, கொஞ்சம் யெங்கா வரலாம்னு வந்திருக்கரனுங்க. வயது தெரியக்கூடாதுன்னுட்டு. கடைசியில பாத்தா, படியெல்லாம் பெருசு பெருசா கட்டி வெச்சு இருக்கீங்க. இப்போ இறங்கும்போது தெரிஞ்சு போயிடும் வயசு. பார்த்திபன் எல்லாம் பார்த்தீங்கல்ல, ஒரு ஓரமா தான் அதுவும் சைடுலயே இறங்குனாரு. இப்போ நானும் அப்படித்தான் இறங்கோனு.

குசும்பு: அதனால இந்த மாதிரி ஃபங்ஷனுக்கு ரெடி பண்றவங்க எங்கள மாதிரி வயசானவங்க வருவாங்கனு, படியெல்லாம் கொஞ்சம் சிறுசா வையுங்க. இல்லாட்டி நாறிப்போயிடும்" என்று பேசினார். இவரது பேச்சைக் கேட்ட நடிகர் தனுஷ் அங்கேயே விழுந்து விழுந்து சிரித்தார். பார்த்திபனையும் கலாய்த்து விட்டதால் அவரும் சிரித்தார். சத்யராஜ் சும்மாவே குசும்பு பிடித்தவர். இப்போது தனது சொந்த ஊருக்கே சென்றுள்ளார், இனி சொல்லவா வேண்டும் என்று அவரது பேச்சைக் கேட்டவர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும் அவர், அடிதடி, வெட்டு குத்து, டமால் டுமீல்னு படங்கள் வந்து கொண்டு இருக்கும்போது, இந்த படம் சரியான ஃபீலிங்ஸ் படமாக இருக்கப்போகிறது என்றும் குறிப்பிட்டார்.
அக்டோபர் 1: இட்லி கடை படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரத்தில் சிறப்பாக சென்னையில் நடைபெற்றது. அதேபோல் டிரைலர் வெளியீட்டு விழா கோவையில் படக்குழு நடத்தியது. இப்படி இருக்கையில் படத்தின் டிரைலரைப் பார்த்த ரசிகர்கள் டிரைலர் நன்றாக உள்ளது. செம செண்டிமெண்ட் ஸ்டோரியாக படம் இருக்கப் போகிறது என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
மாதம்பட்டி ரங்கராஜ்: அதே நேரத்தில் சிலர், படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தாலும் வழக்கம் போல் சிலர் டிரைலரை ட்ரோல் செய்துள்ளார்கள். அதுவும் கடந்த சில வாரங்களாக இணையத்தில் பரபரப்பான பேசு பொருளாக மாறியுள்ள நடிகரும் சமையற்கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கையின் கடந்த காலத்துடனும் சம காலத்தில் அவர் குறித்து விவாதிக்கப்படுகிற ஜாய் கிரிசல்டா திருமணம் வரையிலும் இணையவாசிகள் தொடர்புபடுத்தி பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











