அந்த கேரக்டரில் நடிக்க தாம்ப்பா ஆசை...அதிர வைத்த சத்யராஜ்

சென்னை : எத்தனை படங்களில் நடித்தாலும் எனக்கு மீண்டும் அந்த கேரக்டரில் தான் நடிக்க வேண்டும் என ஆசை என சத்யராஜ் பேசிய பேச்சு அனைவரையும் அதிரவைத்தது. ஆனால் அதற்கு அவர் சொன்ன காரணம் ரசிகர்களிடம் மிகப் பெரிய கைதட்டலை வாங்கியது.

நடிகர் சத்யராஜ் 1978 ம் ஆண்டு சட்டம் என் கையில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி ஆனார். ஆரம்பத்தில் வில்லன் ரோல்களிலேயே நடித்து வந்த சத்யராஜ், பிறகு கேரக்டர் ரோல், சப்போர்டிங் ரோல் என நடிக்க துவங்கினார். 1986 ல் கடலோர கவிதைகள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர், அரசியல்வாதி என முகங்களைக் கொண்டவர் சத்யராஜ்.

அப்பா கேரக்டருக்கு மாறிய சத்யராஜ்

அப்பா கேரக்டருக்கு மாறிய சத்யராஜ்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இதுவரை 230 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் சத்யராஜ். நக்கல், நையாண்டி, காமெடி அரசியல் ஆகியவற்றிற்கு பெயர் போனவர் சத்யராஜ். அரசியல் படங்களில் தொடர்ந்து தயாரித்து, நடித்து வந்த சத்யராஜ் பிறகு அப்பா ரோல்களில் மட்டுமே நடிக்க துவங்கினார். நீண்ட காலத்திற்கு பிறகு சத்யராஜிற்கு நடிப்பிற்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் பாகுபலி. அவர் நடித்த கட்டப்பா கேரக்டர் ஹீரோவிற்கு இணையாக பேசப்பட்டது.

ஆசையை சொன்ன சத்யராஜ்

ஆசையை சொன்ன சத்யராஜ்

சமீப காலமாக கார்த்தி, சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற டாப் ஹீரோக்களுக்கு அப்பா கேரக்டரிலேயே நடித்து வருகிறார் சத்யராஜ். தற்போது சூர்யா நடித்து மார்ச் 10 ம் தேதி ரிலீசாக உள்ள எதற்கும் துணிந்தவன் படத்திலும் சூர்யாவிற்கு அப்பாவாக சத்யராஜ் நடித்துள்ளார். இன்று நடைபெற்ற எதற்கும் துணிந்தவன் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் மேடையில் பேசிய சத்யராஜ் தனது ஆசை பற்றி வெளியிப்படையாக பேசினார்.

அந்த கேரக்டரில் மீண்டும் நடிக்க ஆசை

அந்த கேரக்டரில் மீண்டும் நடிக்க ஆசை

சத்யராஜ் பேசுகையில், மீண்டும் வில்லன் ரோல்களில் நடிக்கவே நான் ஆசைப்படுகிறேன். நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் மீண்டும் நான் வில்லன் ரோல்களில் நடிப்பேன். அந்த ரோலை செய்யவே ஆசைப்படுகிறேன். ஏனென்றால், இப்போதுள்ள தலைமுறை வில்லன் சத்யராஜை மறந்திருப்பார்கள் என நினைக்கிறேன். வில்லன் சத்யராஜ் எப்படி இருப்பார் என காட்ட மீண்டும் வில்லன் ரோல்களில் நடிக்க போகிறேன் என்றார்.

டிரெண்டை உடைப்பாரா சத்யராஜ்

டிரெண்டை உடைப்பாரா சத்யராஜ்

சமீப காலமாக தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்கள், பிரபல டைரக்டர்கள் தான் வில்லனாக மாறி வருகிறார்கள். வில்லன் ரோலில் கலக்கிய பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் கேரக்டர் ரோலுக்கு மாறி உள்ளனர். இந்த டிரெண்டை சத்யராஜ் விரைவில் உடைத்து மீண்டும் மிரட்டலாக வில்லனாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவிற்கு சத்யராஜ் கொடுத்த பட்டம்

சூர்யாவிற்கு சத்யராஜ் கொடுத்த பட்டம்

சூர்யாவுக்கு புரட்சி நாயகன் என பட்டம் வழங்கிய சத்யராஜ், அன்பான ரசிகர்களே இது ஏதோ சூர்யாவை கவருவதற்காக நான் சொல்லவில்லை. அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ அதை மற்றவர்களும் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக அவரை இப்படி அழைக்கிறேன் என்றார். சத்யராஜின் இந்த பேச்சை கேட்டதும் அரங்கத்தில் வெகு நேரமாக கைதட்டல் சத்தம் ஓயாமல் கேட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X