twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரசிகர்களை இப்படியா குழப்புவது...சத்யராஜ் செய்த காரியத்தால் குழம்பி போன ரசிகர்கள்

    |

    சென்னை : நடிகர் சத்யராஜ் சீன மொழியில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால், என்னடா சத்யராஜ் திடீரென சீன மொழியில் பேசுகிறார். என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லையே என ரசிகர்கள் குழம்பி போயினர்.

    1980 கள் துவங்கி வில்லன், ஹீரோ, கேரக்டர் ரோல் என கலக்கி வருகிறார் சத்யராஜ். பிரபு, ரஜினி, கமல் உள்ளிட்ட மற்ற ஹீரோக்களுடன் இணைந்தும் இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக ஹீரோ மற்றும் ஹீரோயின்களின் அப்பா ரோல்களில் அதிகம் நடித்து, பலரின் கவனத்தையும் ஈர்த்து, பாராட்டுக்களை பெற்று வருகிறார் சத்யராஜ்.

    விஜய் மக்கள் இயக்கத்தில் திட்டமிடல் இல்லையா? எஸ்.ஏ. சந்திரசேகருக்கு அந்த வருத்தம் இருப்பது ஏன்?விஜய் மக்கள் இயக்கத்தில் திட்டமிடல் இல்லையா? எஸ்.ஏ. சந்திரசேகருக்கு அந்த வருத்தம் இருப்பது ஏன்?

    தந்தையாக அசத்திய சத்யராஜ்

    தந்தையாக அசத்திய சத்யராஜ்

    அப்படி 2018 ம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நடித்த, பெண்கள் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் கனா. அருண்ராஜா காமராஜ் இயக்கிய இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பா ரோலில் நடித்திருந்தார் சத்யராஜ். அருண்ராஜா காமராஜ் முதல் முறையாக டைரக்டராக அறிமுகமான இந்த படத்தை சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது. இந்த படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

    தெலுங்கிலும் செம ஹிட்

    தெலுங்கிலும் செம ஹிட்

    பிறகு இந்த படம் கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்திருந்தனர். சத்யராஜின் ரோலில் ராஜேந்திர பிரசாத் நடித்திருந்தார். தெலுங்கிலும் இந்த படம் செம ஹிட் ஆனது. இந்நிலையில் கனா படம் மார்ச் 18 ம் தேதி சீனாவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

    வார்த்தையே வரல

    வார்த்தையே வரல

    இந்த தகவலை ஐஸ்வர்யாவே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதை அறிவிப்பதே மிக த்ரில்லிங்காக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர், தனது சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. கனா படத்திற்கு அன்பு, ஆதரவு அளித்து வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டிருந்தார். இந்த வாய்ப்பை கொடுத்த அருண்ராஜா காமராஜ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு நன்றி என அவர் தெரிவித்திருந்தார்.

    இதுக்கு தான் அந்த வீடியோவா

    இதுக்கு தான் அந்த வீடியோவா

    ரஜினியின் முத்து உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்கள் மட்டுமே இதுவரை சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் கனா படமும் சீனாவில் ரிலீசாக உள்ளது. இதை முன்னிட்டு சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண்ராஜா காமராஜ் ஆகியோருக்கு சீன மொழியில் பேசி வாழ்த்து தெரிவித்து, வீடியோ வெளியிட்டுள்ளார் சத்யராஜ். அந்த வீடியோவில் தான் பேசியதற்கு அவரே தமிழிலும் விளக்கம் சொல்லி உள்ளார். சத்யராஜின் இந்த வீடியோவை லைக் செய்து, பலரும் கனா டீமுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    English summary
    Aishwarya Rajesh, Sivajarthikeyan, Sathyaraj starred Kanaa to be released in China on March 18th. Sathyaraj wished Kanaa team in chinese language and shared this video on social media. Now fans have also started to wish the team.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X