»   »  ஜல்லிக்கட்டை அடுத்து நெடுவாசலுக்காக குரல் கொடுக்கும் ஜி.வி. பிரகாஷ்

ஜல்லிக்கட்டை அடுத்து நெடுவாசலுக்காக குரல் கொடுக்கும் ஜி.வி. பிரகாஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கவிடாமல் நெடுவாசல் மற்றும் விவசாயிகளை காக்க வேண்டும் என்று நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் இளைஞர்கள் அமைதியான வழியில் புரட்சி நடத்தினார்கள். அந்த புரட்சிக்கு முழு ஆதரவு அளித்தவர் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்.

Save Neduvasal: Says GV Prakash Kumar

ஜல்லிக்கட்டுக்காக பாடல் எல்லாம் வெளியிட்டு தமிழக இளைஞர்களின் மனம் கவர்ந்தார். இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ள நெடுவாசல் விவசாய கிராமத்திற்கும், விவசாயிகளுக்கும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் ஜி.வி.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நெடுவாசலை காக்கவும், விவசாயிகளை காக்கவும், தமிழகத்தை காக்கவும் என தெரிவித்துள்ளார்.

அழகிய விவசாய கிராமத்தை பாழ்நிலமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதை எதிர்த்து நெடுவாசல் மக்கள் ஏற்கனவே போராட்டத்தில் குதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Music director cum actor GV Prakash Kumar has tweeted in support of Neduvasal and farmers. It is noted that he supported Jallikattu earlier.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil