»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

முன்னணி நடிகைகளான சிம்ரன், ஜோதிகா, சினேகா போன்றோருக்கு பின்னணி குரல் கொடுத்து வரும் சவீதாராதாகிருஷ்ணனுக்கு பிப்ரவரி 3ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறுகிறது.

சிம்ரன்,ஜோதிகாவுக்கு எப்போது திருமணம் நடக்கிறதோ, ஆனால் அவர்களின் குரலாக இருந்து வரும் சவீதாவுக்குதிருமணம் நிச்சயமாகியுள்ளது.

வாலி படத்தில் சிம்ரனின் நடிப்பு பெருமளவில் பேசப்பட அவருக்குப் பின்னணி குரல் கொடுத்த சவீதா முக்கியக்காரணமாவார். அதேபோல, ஜோதிகா பிரபலமடைவதற்கும் இவரது குரலே காரணம். நடிகைகளுக்கு இணையாகஇவரும் பிரபலமும், புகழும் அடைந்தார்.

நந்திதா தாஸ், திரிஷா, சினேகா, ஷார்மி, ரதி என பலருக்கும் குரல் கொடுத்துள்ளார் சவீதா.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்சிறந்த பின்னணி கலைஞருக்கான ஆந்திர அரசின் நந்தி விருது பெற்றவர்.

இவருக்கும், அமெரிக்காவில் பணியாற்றி வரும் பாலமுருகன் என்பவருக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது.

Please Wait while comments are loading...