»   »  முன்னாள் காதலியை வேறு ஆணுடன் பாரில் பார்த்தேன்: அனிருத்

முன்னாள் காதலியை வேறு ஆணுடன் பாரில் பார்த்தேன்: அனிருத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் விஐபி படத்தில் வந்த ஊதுங்கட சங்கு பாடலுக்கு இசையமைத்த பின்னணி குறித்து அனிருத் விளக்கம் அளித்துள்ளார்.

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் நடித்த வேலையில்லா பட்டதாரி(விஐபி) படம் ஹிட்டானது. இதையடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிருத் மாணவர்களிடம் கூறுகையில்,

ஊதுங்கடா சங்கு

ஊதுங்கடா சங்கு

ஒரு நாள் என் முன்னாள் காதலியை வேறு ஒரு ஆணுடன் பாரில் பார்த்தேன். உடனே நேராக வீட்டிற்கு சென்று ஊதுங்கடா சங்கு பாடலுக்கு இசையமைத்தேன்.

எனக்கென யாரும் இல்லையே

எனக்கென யாரும் இல்லையே

எனக்கு ஒரு பெண் மீது ஈர்ப்பு இருந்தது. அவர் வெளிநாட்டிற்கு செல்வதை பார்த்த பிறகு எனக்கென யாரும் இல்லையே பாடலுக்கு இசையமைத்தேன் என அனிருத் தெரிவித்துள்ளார்.

அனிருத்

அனிருத்

விஐபி படத்திற்கு சூப்பர் ஹிட் இசை கொடுத்த அனிருத் இரண்டாம் பாகத்திற்கு இசையமைக்கவில்லை. விஐபி 2 படத்திற்கு தனுஷின் புதிய செல்லமான ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.

பெண்

பெண்

அனிருத்துக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளார்களாம். இதையடுத்து அவர்கள் அனிருத்துக்கு பெண் பார்க்கும் வேலையில் பிசியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

English summary
Anirudh said that he composed music for 'oodhungada sangu' track from VIP after seeing his former girl friend with another guy at a bar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil