»   »  'விஜய் அண்ணா'வுக்கு ராக்கி கட்ட மும்பையில் இருந்து பறந்து வந்த நடிகை

'விஜய் அண்ணா'வுக்கு ராக்கி கட்ட மும்பையில் இருந்து பறந்து வந்த நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இயக்குனர் விஜய்க்கு ராக்கி கட்டுவதற்காக மும்பையில் இருந்து சென்னை வந்துள்ளார் நடிகை சயீஷா சைகல்.

இயக்குனர் ஏ.எல். விஜய்யின் வனமகன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சயீஷா சைகல். தற்போது அவர் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக உள்ளார்.

வனமகன் படத்தில் அவர் போட்ட ஆட்டத்தை பார்த்து கோலிவுட் ஹீரோக்கள் பலர் அசந்துபோய் அவரை தங்களுக்கு ஜோடியாக்க முயற்சித்து வருகிறார்கள்.

ராக்கி

ராக்கி

இயக்குனர் விஜய்க்கு ராக்கி கட்டுவதற்காக சயீஷா மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். ராக்கி கட்ட இந்த பொண்ணு இவ்ளோ தூரம் வந்துச்சா என்று பலரும் வியந்தனர்.

விஜய்

விஜய்

விஜய் என் அண்ணன் போன்றவர். வனமகன் படப்பிடிப்பின்போது ஒரு தங்கையை போன்று என்னை பத்திரமாக பார்த்துக் கொண்டார். அதனால் அவருக்கு ராக்க கட்ட சென்னை வந்தேன் என்று சயீஷா கூறியுள்ளார்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

நான் ஹைதராபாத்திற்கு ஜாகையை மாற்றவில்லை. இன்னும் மும்பையில் தான் வசிக்கிறேன். ஹைதராபாத்தில் வீடு வாங்கியுள்ளேன். தெலுங்கு பட ஷூட்டிங்கிற்கு வரும்போது அந்த வீட்டில் தங்குவேன் என்கிறார் சயீஷா.

ரவி

ரவி

ஜெயம் ரவியுடன் சேர்ந்து பணியாற்றதில் மகிழ்ச்சி. அவர் சீனியர் நடிகர், 21 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால் நடிகைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். புதுமுக நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க வேறு எந்த ஹீரோவாக இருந்தாலும் இரண்டு முறை யோசித்திருப்பார்கள் என்று சயீஷா தெரிவித்துள்ளார்.

நடனம்

நடனம்

நான் நடித்த தெலுங்கு படமான அகிலில் நான் ஆடிய நடனத்தை பார்த்துவிட்டு விஜய் சார் என்னை நேரடியாக தொடர்பு கொண்டார். என் கையில் தற்போது 2 தமிழ் படங்கள், 1 தெலுங்கு படம், 1 இந்தி படம் உள்ளது என்கிறார் சயீஷா.

English summary
Vanamagan fame Sayeesha Saigal has come to Chennai from Mumbai to tie rakhi on director AL Vijay's wrist.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil