»   »  ஜெயம் ரவிக்கு ஜோடியான சூப்பர் ஸ்டாரின் பேத்தி

ஜெயம் ரவிக்கு ஜோடியான சூப்பர் ஸ்டாரின் பேத்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் இந்தி சூப்பர் ஸ்டார் திலீப் குமாரின் பேத்தி சயீஷா சைகல்.

ஏ.எல். விஜய் ஜெயம் ரவியை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் ரவிக்கு ஜோடியாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப் குமாரின் பேத்தி சயீஷா சைகல் நடிக்கிறார்.

19 வயதே ஆன சயீஷா இந்த படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.

அகில்

அகில்

சயீஷா நாகர்ஜுனாவின் மகன் அகில் ஜோடியாக அகில் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அகில் படம் மூலம் நடிகையானவர் சயீஷா. நாகர்ஜுனா-அமலா தம்பதியின் மகன் அகிலுக்கும் இது தான் முதல் படம்.

சயீஷா

சயீஷா

அகில் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. இதனால் சயீஷாவுக்கு தெலுங்கு திரையுலகில் மவுசு இல்லை.

திலீப் குமார்

திலீப் குமார்

சயீஷா பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப் குமாரின் பேத்தி ஆவார். மும்பையை சேர்ந்த நடிகைகள் கோலிவுட்டுக்கு வந்து செல்லும் நிலையில் சயீஷாவும் வந்துள்ளார்.

ஷிவாய்

ஷிவாய்

சயீஷா கோலிவுட்டுக்கு முன்னதாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அஜய் தேவ்கன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள ஷிவாய் படத்தில் நடித்துள்ளார் சயீஷா. ஷிவாய் அடுத்த மாதம் 28ம் தேதி ரிலீஸாகிறது.

English summary
Bollywood superstar Dilip Kumar's grandniece Sayeesha Saigal is all set to romance Jayam Ravi in his upcoming movie to be directed by AL Vijay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil