»   »  டோலிவுட்டில் செய்த தவறை கோலிவுட்டில் செய்யக் கூடாது: ஜெயம் ரவி ஹீரோயின் உறுதி

டோலிவுட்டில் செய்த தவறை கோலிவுட்டில் செய்யக் கூடாது: ஜெயம் ரவி ஹீரோயின் உறுதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கில் செய்த தவறை தமிழில் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளாராம் நடிகை சயீஷா ஷைகல்.

பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் பேத்தி சயீஷா ஷைகல்(19). நாகர்ஜுனாவின் இளைய மகன் அகிலின் அகில் படம் மூலம் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு அஜய் தேவ்கனின் ஷிவாய் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

Sayesha is very careful in Kollywood

தற்போது ஜெயம் ரவியின் வனமகன் படம் மூலம் கோலிவுட் வந்துள்ளார். முதல் படம் ரிலீஸாவதற்கு முன்பே கார்த்தி, விஷால் நடிக்கும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மேலும் 3 படங்களில் நடிக்க அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். சயீஷாவுடன் நடிக்க இளம் ஹீரோக்கள் ஆவலாக இருப்பதே அவருக்கு மவுசு அதிகரிக்க காரணம்.

தெலுங்கு, இந்தி படங்களில் வந்த வாய்ப்புகளை தவறவிட்ட தவறை தமிழில் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளாராம் சயீஷா.

English summary
Sayesha Saigal wants to make sure that she doesn't lose any opprtunity in Kollywood unlike in Tollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil