»   »  நடிகர் சங்க போராடத்தை கடுமையாக எதிர்க்கும் மெரினா புரட்சியாளர்கள்#SayNoToNadigarSangam

நடிகர் சங்க போராடத்தை கடுமையாக எதிர்க்கும் மெரினா புரட்சியாளர்கள்#SayNoToNadigarSangam

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ள நடிகர் சங்கத்திற்கு மாணவ புரட்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மெரினா கடற்கரையில் மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் புரட்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை உண்ணாவிரதம் இருக்க உள்ள நடிகர் சங்கத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதையடுத்து #SayNoToNadigarSangam என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.

எதிர்ப்பு

தேவையில்லாமல் மீடியா வெளிச்சத்தை தன் பக்கம் திருப்ப உண்ணாவிரதம் இருக்கப் போகும் நடிகர் சங்கத்திற்கு கண்டனங்கள்...

பப்ளிசிட்டி

தேவையில்லாத பப்ளிசிட்டி தேடும் திரைத் துறை மக்கள் வேண்டாம்!!! தமிழனாய் இருந்தால் மெரினா வா. வந்து மக்களோடு போராடு #Saynotonadigarsangam

தேவையில்லை

மாணவர்களின் போராட்டத்தை நீர்த்து போக செய்யும் நடிகர் சங்க அடையாள உண்ணாவிரதம் தேவையில்லை #SayNoToNadigarSangam

மெரினா

தனியா போராட்டம் பண்ணாம

மாணவர்களோட கலந்து

மெரினால போராட்டம் பண்ணுங்கப்பா#SayNoToNadigarSangam

நடிகர்கள்

எங்களுக்கு நடிகர்கள் தேவையில்லை...
எங்களுக்கு ரீல் ஹீரோக்கள் அல்ல ரியல் ஹீரோக்கள் தேவை #SayNoToNadigarSangam

தல, தளபதி

தலயா இருந்தாலும்... தளபதியா இருந்தாலும் இந்த விஷயத்துல ...#SayNoToNadigarSangam

மூனு நாளா போராடிகிட்டு இருக்குர மாணவர்களுக்கு தான் ஆதரவு.

வேண்டாம்

சினிமா நடிகர்கள் வரவேண்டாம்
இளைஞர்கள் போராட்டத்தில் நடிகர்கள் பங்கெடுத்து ஒளியை வாங்கிக் கொள்ளக் கூடாது- #KamalHaasan#SayNoToNadigarSangam

சங்கம்

இங்க எந்த சங்கமும் தனித்தனியா போராட்டம் பண்ணல... தமிழங்கற உணர்வோட போராடுறவங்களை கொச்சைப் படுத்த வேண்டாம்...#SayNoToNadigarSangam

English summary
Marina protesters don't want Nadigar Sangam to protest alone. Instead they expect the celebs to join them and fight for our cultural sport Jallikattu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil