»   »  இவர் பெரிய ஆளாவார் என எழுதிக் கொடுக்கிறேன்: சூப்பர் ஸ்டார் பேத்தியை புகழ்ந்த ஜெயம் ரவி

இவர் பெரிய ஆளாவார் என எழுதிக் கொடுக்கிறேன்: சூப்பர் ஸ்டார் பேத்தியை புகழ்ந்த ஜெயம் ரவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சயீஷா பெரிய ஆளாக வருவார் என்று நான் எழுதிக் கொடுக்கிறேன் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப் குமாரின் பேத்தியான சயீஷா சைகல் ஜெயம் ரவியின் வனமகன் படம் மூலம் கோலிவுட் வந்துள்ளார். ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இந்த படத்தை அவரது தந்தை அழகப்பன் தயாரித்துள்ளார்.


படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.


இசை

இசை

இசை வெளியீட்டு விழாவுக்கு ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் வந்திருந்தார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இது அவர் இசையமைத்துள்ள 50வது படம்.


சயீஷா

சயீஷா

இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த சயீஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த பட வாய்ப்பு அளித்த விஜய் சாருக்கு நான் எப்பொழுதுமே நன்றிக்கடன் பட்டுள்ளேன். பிரபுதேவா சாருடன் பணியாற்றியதற்கு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். அவர் தான் என் அறிமுக பாடலின் டான்ஸ் மாஸ்டர் என்றார்.


ரவி

ரவி

ரவி பேசும்போது, சயீஷா திறமையானவர். அவர் பெரிய ஆளாக வருவார் என்று நான் எழுதிக் கொடுக்கிறேன். நாட்டில் உள்ள சிறந்த டான்ஸர்களில் அவரும் ஒருவர் என்றார்.


விஷால்

விஷால்

வனமகன் ஷூட்டிங்கில் சயீஷா ஆடியதை பார்த்து விஷாலும், கார்த்தியும் ஆச்சரியப்பட்டனர். கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் சயீஷா நடிக்கிறார். சயீஷாவுடன் டான்ஸா கார்த்தி நீ செத்த என்று விஷால் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Actor Jayam Ravi talked about his Vanamagan co-star Sayyeshaa. He said that, "She is going to get very busy with projects. I can give it in writing. She brings unbelievable energy to the sets. Also, she is easily one of the best dancers in the country today."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil