கேப்டன், பேபி டாடி...ஆர்யாவிற்கு உருகி உருகி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மனைவி சாயிஷா
சென்னை : அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஆர்யா. ஹீரோ, செகண்ட் ஹீரோ, வில்லன் என பல ரோல்களில் நடித்து விட்டார் ஆர்யா.
நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பல முகங்களைக் கொண்ட ஆர்யா நடித்து சமீபத்தில் வெளிவந்த சார்பேட்டா பரம்பரை மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆர்யா வில்லனாக நடித்த எனிமி படமும் ரிலீசாகி அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

கைவசம் 2 படங்கள்
ஆர்யா தற்போது கேப்டன், நலன் குமாரசாமி இயக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் பெயரிடப்படாத வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். இவர் 2019 ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இந்த ஆண்டு ஜுலை மாதம் தான் மகள் பிறந்ததாள்.

ஆர்யா பிறந்தநாள்
இந்நிலையில் ஆர்யா இன்று தனது 41 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்யாவிற்கு சோஷியல் மீடியாக்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆர்யாவின் காதல் மனைவியும் நடிகையுமான சாயிஷா ட்விட்டரில் அடுத்தடுத்து பதிவிட்டு வரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

லவ் யூ கேப்டன்
காலையிலேயே Happy Birthday Arya என்ற போஸ்டருடன், ஐ லவ் யூ கேப்டன் ஆர்யா. ஹேப்பி பர்த்டே, நமது ஃபேவரைட் ஷக்தி ராஜனின் இன்னொரு அற்புதமான படத்தில் உன்னை பார்க்க காத்திருக்க முடியவில்லை என கேப்ஷன் பதிவிட்டிருந்தார் சாயிஷா. இதனை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்து, ஆர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து பகிர்ந்திருந்தனர்.

பர்த்டே பேபி டாடி
சிறிது நேரத்திலேயே ஆர்யாவுடன் சேர்ந்திருக்கும் இரண்டு ஃபோட்டோக்களை பகிர்ந்து அதோடு, ஹேப்பி பர்த்டே பேபி டாடி. நீ எங்கள் வாழ்க்கையில் மாற்று இல்லாத ஒருவர். உன்னை அடைந்ததற்கு நன்றி. கடவுளின் அனைத்து புதையல்களும் உனக்கு கிடைக்கட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











