»   »  என் மகன் நயன்தாராவுக்கு லிப் டூ லிப் கொடுத்தானே: ஃபேஸ்புக்கில் பெருமையடித்த தாய்

என் மகன் நயன்தாராவுக்கு லிப் டூ லிப் கொடுத்தானே: ஃபேஸ்புக்கில் பெருமையடித்த தாய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது மகன் திருநாள் படத்தில் நயன்தாராவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்ததை ஒரு தாய் ஃபேஸ்புக்கில் பெருமையாக தெரிவித்துள்ளார்.

ராம்நாத் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா நடித்த திருநாள் படத்தில் வரும் ஒரு காட்சியை பற்றி தான் பலரும் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த காட்சியில் 6 வயது பள்ளி மாணவன் நயன்தாராவுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கிறான்.

 

முத்தம்

முத்தம்

ஒரு பொடியனை லிப் டூ லிப் கொடுக்க வைத்துள்ளாரே இந்த ராம்நாத். இவருக்கு ஏதாவது பிரச்சனையா என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அவரை கழுவிக் கழுவிக் ஊத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தாய்

தாய்

முத்தக் காட்சியில் நடித்த பொடியனின் தாய் ஜோதி மகேஷோ அதை பெருமையாக நினைத்து அந்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தோடு அவர் கூறியிருப்பதாவது, என் மகன் நயன்தாராவுடன் லிப் லாக். திருநாள் படத்தில் என தெரிவித்துள்ளார்.

நல்ல தாய்

ஜோதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்ட புகைப்படத்தை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர் ஒரு நல்ல தாய், இந்த நூற்றாண்டின் தாய் விருதை இவருக்கே கொடுக்க வேண்டும் என கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். எனவே சில நிமிடங்கள் கழித்து அந்த பதிவை நீக்கிவிட்டார் ஜோதி மகேஷ்.

நீக்கம்

நீக்கம்

தான் வெளியிட்ட புகைப்படத்தை வைத்து ஆளாளுக்கு கலாய்ப்பதை பார்த்த ஜோதி அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டார். ஒரு சிறுவனை போய் லிப் டூ லிப் கொடுக்க வைப்பதா என பலரும் கொதிப்படைந்துள்ளனர்.

ஜாலி

சிறுவன் ஒரு பெரிய பெண்ணுக்கு லிப் டூ லிப் கொடுத்தா அது ஜாலி, காமெடி என்பார்கள். அதுவே ஒரு சிறுமி வாலிபருக்கு கொடுத்தால் இந்நேரம் வரிந்து கட்டிக் கொண்டு பலர் சண்டைக்கு வந்திருப்பார்கள். இது என்னங்கடா உங்கள் நியாயம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

English summary
A mom's post on Facebook about her six-year old son's liplock with Nayanthara in Thirunaal movie is widely criticised.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil