Just In
Don't Miss!
- News
இன்று பாரத் பந்த்.. அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்
- Automobiles
விற்பனைக்கு வரவிருக்கும் 3 புதிய சீன எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! சூப்பர் சோகோ பிராண்டில் வருகின்றன...
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.02.2021: இன்று இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல ரொம்ப கவனமா இருக்கணும்...
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2 வருடத்துக்குப் பிறகு ஷூட்டிங்.. இயக்குனர், உதவி இயக்குனர் திடீர் மோதல்.. பிரபல ஹீரோ அப்செட்!
மும்பை: சினிமா படப்பிடிப்பின்போது இயக்குனருக்கும் உதவி இயக்குனருக்கு மோதல் ஏற்பட்டதை அடுத்து பரபரப்பு ஏறபட்டது.
இந்தி நடிகர் ஷாருக்கான், ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்த ஸீரோ என்ற படத்தில் நடித்திருந்தார்.
ஸ்டைலா கெத்தா மாஸா கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட டிராவலிங் டைரிஸ் புகைப்படங்கள்!
கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் ரிலீஸ் ஆன இந்தப் படம், எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

வெற்றிமாறன், அட்லி
இதனால் தனது அடுத்தப் படத்தை நடிகர் ஷாருக் கான் உடனடியாக ஆரம்பிக்கவில்லை. நல்ல கதைகளில் நடிக்கலாம் என்று சில இயக்குனர்களிடம் கதைக் கேட்டிருந்தார். அட்லி, இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோரிடமும் கதை கேட்டிருந்தார். இந்நிலையில் இவர்கள் இயக்கும் படங்களில் ஷாருக் நடிப்பதாகக் கூறப்பட்டது.

சித்தார்த் ஆனந்த்
ஆனால், ஷாருக் கான் எதுவும் சொல்லவில்லை. இந்நிலையில் சித்தார்த் ஆனந்த் இயக்கும் பதான் என்ற படத்தில் ஷாருக் நடித்து வருகிறார். இவர், சலாம் நமஸ்தே, அஞ்சனா அஞ்சானி, வார் உட்பட சில படங்களை இயக்கி உள்ளார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் இதை தயாரிக்கிறது.

வாக்குவாதம் ஏற்பட்டது
இதில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார். டிம்பிள் கபாடியா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக மும்பையில் நடந்து வருகிறது. இரண்டு வருடத்துக்குப் பின் இந்த ஷூட்டிங்கில் ஷாருக் கான் கலந்து கொண்டிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் படப்பிடிப்பின்போது, இயக்குனர் சித்தார்த் ஆனந்துக்கும் உதவி இயக்குனர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தகராறாக மாறியது
செட்டுக்குள் யாரும் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று கூறப்பட்டிருந்தும் உதவி இயக்குனர் உள்ளே கொண்டு வந்தாராம். இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதம், ஒரு கட்டத்தில் தகராறாக மாறியது. இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஷாருக்கான் அப்செட்
இதனால் ஷூட்டிங் ஒரு நாள் கேன்சல் செய்யப்பட்டது. பின்னர் அந்த உதவி இயக்குனர் நீக்கப்பட்டார். இதுபற்றி தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தச் சண்டையினால், ஷாருக்கான் அப்செட் ஆகியுள்ளதாகவும் செட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலை அடைந்துள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இயக்குனர் கவலை
ஆனால், இயக்குனர் தரப்பில் இதை மறுத்துள்ளனர். யாரும் யாரையும் அடிக்கவில்லை என்றும் துணை நடிகர் ஒருவர் செல்போனால் படம் பிடித்ததால் இயக்குனர் கவலை அடைந்ததாகவும் இதனால் பிரச்சனை ஏற்பட்டதாகவும் சிரீயசாக
எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.