இதயமில்லாத தனுஷ் ரசிகர்கள்.. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படி கடுப்பாக என்ன காரணம்?

சென்னை: நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான (பவர் பாண்டி) ப. பாண்டி படத்திற்கு இசையமைத்திருந்தார் ஷான் ரோல்டன்.

அந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால், அடுத்ததாக இருவரும் ஒன்றாக பணியாற்றிய விஐபி 2 பாடல்கள் மற்றும் பின்னணி இசை சோபிக்கவில்லை.

இந்நிலையில், மீண்டும் தனுஷ் உடன் ஷான் ரோல்டன் கூட்டணி அமைக்கக் கூடாது என தனுஷ் ரசிகர்கள் சிலர் வம்படியாக செய்த ட்ரோல் காரணமாக ஷான் ரோல்டன் பயங்கர கடுப்பாகி உள்ளார்.

3 நாள் தான்

3 நாள் தான்

அந்த அப்செட்டில் வேலையில்லாத பட்டதாரி பாடல்கள் சுமாராக வரக் காரணம் மொத்த படத்திற்குமே தனுஷ் 3 நாள் மட்டுமே தனக்கு டைம் கொடுத்து இசையமைக்க சொன்னது தான். அது மிகவும் சிரமமான விஷயம் என்றும் இது தொடர்பாக தனுஷ் பேசியுள்ளார் என்றும் ஷான் ரோல்டன் பரபரப்பாக போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

பெரிய அப்டேட்

பெரிய அப்டேட்

இந்த பிரச்சனை ஆரம்பிக்க காரணமே சமீபத்தில் தனது அடுத்த பட அறிவிப்பு குறித்து பெரிய அப்டேட் வரப் போவதாக இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தனது ரசிகர்களுக்காக போட்ட ட்வீட்டுக்கு கீழே சில தனுஷ் ரசிகர்கள் செய்த ட்ரோல் சேட்டை தான்.

வேண்டாம் தனுஷ்

வேண்டாம் தனுஷ்

மீண்டும் ஷான் ரோல்டனை மட்டும் இசையமைப்பாளராக போட்டு எந்த படத்தையும் பண்ணாதீங்க தனுஷ் என அவரது சில ரசிகர்கள் போட்ட கமெண்ட்டுகளை பார்த்து பயங்கர கடுப்பான ஷான் ரோல்டன், இந்த அறிவிப்பு உங்களுக்கானது அல்ல என விளாசி உள்ளார்.

இதயமில்லாத ரசிகர்கள்

இதயமில்லாத ரசிகர்கள்

மேலும், ஈவு இரக்கமற்றவர்கள் என்றும் இதயமில்லாத சில தனுஷ் ரசிகர்கள் இந்த பிரச்சனை பெரிது படுத்தி உள்ளனர் என்றும் வரிசையாக ட்வீட்களை போட்டு வெளுத்து வாங்கிய இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், கூடிய விரைவில் தனுஷ் உடன் நல்ல படங்களில் பணியாற்றுவேன் என்றும் கூறியுள்ளார்.

ரசிகர்கள் ஆதரவு

ரசிகர்கள் ஆதரவு

மேலும், அன்பான தனுஷ் ரசிகர்கள் ஒருபோதும் இப்படி மோசமான ட்ரோல்களை செய்யாமல் எனக்கு ஆதரவு கொடுத்ததற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார் ஷான் ரோல்டன். அவரது அந்த ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் நீங்க கவலைப் படாதீங்க சார்.. விஐபி 2வில் வந்த இறைவனாய் தந்த இறைவியே பாடல் எல்லாம் வேற லெவல் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Read more about: dhanush தனுஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X