»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

கோவை:

லாட்ஜ், மற்றும் டாக்சிக்கு ரூ. 4லட்சம் பாக்கி வைத்த பூங்குயிலே படத் தயாரிப்பாளரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

பொள்ளாச்சியில் நடிகர் உதயா மற்றும் நடிகை விந்தியா ஆகியோரைக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் பூங்குயிலே. நடிகர் உதயா ஏற்கனவேதிருநெல்வேலி படத்தில் அறிமுகமானார். விந்தியா சங்கமம் படத்தில் அறிமுகமானார். இந்த இரண்டு அறிமுகங்களையும் இணைத்து தயாரிப்பாளர்பூங்குயிலே படத்தை பொள்ளாச்சியில் தயாரித்தார்.

இதற்கான படப்பிடிப்பு பொள்ளாச்சியைச் சுற்றிலும் உள்ள பொன்னாபுரம், பொன்னாலம்மன் துறை, ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர் ஆகியஇடங்களில் நடந்தது. இந்த ஊர்களில் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.

இதில், கரண், மணிவண்ணன், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். இதற்காக பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் முன் பணம் எதுவுமின்றி தங்கினர்.படப்பிடிப்பின் போது தேவையான உணவு இங்கேயே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதே போன்று டாக்சியும் எடுத்துச் சென்றனர். படப்பிடிப்பு முடிந்ததும்,நடிகர், நடிகைகளுடன் ஜெயமுருகன் எஸ்கேப் ஆனார். ஓட்டலில் படப்பிடிப்பின் மேலாளர் செல்வம் மற்றும் உதவியாளர் ஆகியோர் மட்டும் தங்கியிருந்தனர்.

இவர்களும் திடீரென மாயமாயினர். இதையடுத்து ஹோட்டல் உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Read more about: cinema, director, escape, hotel, taxi
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil