»   »  சட்டசபையில் கருணாநிதிக்கு சீட் எங்கே?

சட்டசபையில் கருணாநிதிக்கு சீட் எங்கே?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபையில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு,சபாநாயகர் காளிமுத்துவின் சீட்டுக்கு அருகே சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அணி வெற்றி பெற்றுஆட்சி அமைத்துள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராகபதவியேற்றுள்ளார்.

இந்த மாதம் 22ம் தேதி சட்டசபை கூடியபோது, யாருக்கும் சரியாக சீட்ஒதுக்கப்படாததால் அனைவரும் கிடைத்த இடத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை சட்டசபை கூடியபோது அனைவருக்கும் இருக்கைகள்ஒதுக்கப்பட்டன. சபை மரபுப்படி எதிர்கட்சி தலைரும் தி.மு.க. உறுப்பினருமானஅன்பழகனுக்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிர் வரிசையில் முதல் இருக்கைவழங்கப்பட்டது.

அன்பழகனையடுத்து ஆற்காடு வீராாமிக்கு இருக்கை வழங்கப்பட்டுள்ளது. அவருக்குஅடுத்து த.மா.கா. சட்டசபை தலைவர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியமும், லட்சுமணனும்அமர்ந்திருப்பார்கள்.

இவர்களைத் தொடர்ந்து பா.ம.க.வின் ஜி.கே. மணி, ஐ.கணேசன் ஆகியோருக்குஇருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, சட்டசபை சபாநாயகர் காளிமுத்துவின் இருக்கைக்குஅருகே முதல் வரிசையில் இருக்கை வழங்கப்பட்டுள்ளது.

Read more about: chennai, karunanidhi, seat, tamilnadu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil