Don't Miss!
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அய்யோ என்ன இப்படி ஆகி போச்சு..வம்பில் சிக்கிய வாரிசு..நஷ்டத்தில் தயாரிப்பு நிறுவனம்!
சென்னை : வாரிசு இசை வெளியீட்டு விழாவின் போது ஏராளமான இருக்கைகள் சேதம் அடைந்துள்ளதால், தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழியில் வெளியாகி உள்ள இப்படம் ஜனவரி 12ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
இப்படத்தில், ராஷ்மிகா,சரத்குமார்,ஷாம், பிரகாஷ்ராஜ், சங்கீதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
ப்ரீ ரிலீஸ் பிஸினஸில் அடித்து நொறுக்கிய துணிவு... அஜித்தின் விஸ்வரூபத்தால் கலங்கிய வாரிசு!

வாரிசு
வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலும், தீ தளபதி பாடல் ஏற்கனவே வெளியாகி விட்டது. இதில் ரஞ்சிதமே பாடல் பலவிதமான விமர்சனங்களை பெற்றாலும் இதுவரை 10 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, நேற்று முன் தினம் நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், விஜய்யின் மனைவி சங்கீதா, அப்பா எஸ்ஏ சந்திரசேகர், அம்மா ஷோபா, சரத்குமார், பிரகாஷ், இசையமைப்பாளர் தமன், வம்சி, தில் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாட்டுப்பாடி அசத்திய விஜய்
இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை காண திரண்டிருந்த ரசிகர்கள், அரங்கிற்குள் செல்போன் டார்ச் லைட்டுகளை அடித்து அரங்கை ஜொலிக்க வைத்தனர். அரங்கமே டார்ச் லைட்டில் மூழ்கியது. இதையடுத்து, மேடையில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்யை ரசிகர்கள் கைத்தட்டி ஆராவாரம் செய்து வரவேற்றனர். விஜய் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை பாடியது மட்டுமில்லாமல் சின்னதாக ஒரு ஸ்டெப் போட்டு ரசிகர்களை குத்தாட்டம் போடவைத்தார்.

அன்பு தான் உலகின் மிகப்பெரிய ஆயுதம்
இதையடுத்து விழாவில் பேசிய விஜய், அன்பு தான் உலகத்தை ஜெயிக்க வைக்கக் கூடிய ஒரே விஷயம். ரசிகர்களின் அன்பு தான் எனக்கான போதை. அன்பே தான் உலகின் மிகப்பெரிய ஆயுதம். விஜய் மக்கள் இயக்கம் ரத்த தானம் செய்வது பெருமையாக இருக்கிறது. எனது ரசிகர்களின் இரத்த தானம் பற்றி நான் நீண்ட காலமாக பேச வேண்டும் என நினைத்திருந்தேன். இனம், மதம், ஜாதி, வேறுபாடுகள் இல்லாத ஒரே விஷயம் ரத்தம் என்று தனது ரசிகர்களை வெகுவாக புகழ்ந்து பேசினார். இசை விழா எந்த தொலைக்காட்சியிலும், நேரடியாக ஒளிபரப்பாகவில்லை என்றாலும், சோஷியல் மீடியாவில் இந்த நிகழ்ச்சி குறித்த அனைத்து நிகழ்வுகளும் வெளியானது.

என் நெஞ்சில் குடியிருக்கும்
இதையடுத்து, விஜய் விழா மேடையில் இருந்தவாறே அரங்கில் நிறைந்திருந்த ரசிகர்களுடன் செல்ஃபி விடியோ ஒன்றை எடுத்திருந்தார். அந்த வீடியோவை தனது டிவிட்டரில் ' என் நெஞ்சில் குடியிருக்கும்' என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார் விஜய் இந்த வீடியோ இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது

அய்யோ இப்படி ஆகிபோச்சே
இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நேரு ஸ்டேடியத்தின் ஏராளமான இருக்கைகள் சேதம் அடைந்துள்ளன. இன்று சேதம் அடைந்த இருக்கைகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளதாக அரங்கத்தின் பொறுப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. மேலும், சேத கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின் தயாரிப்பு நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்களால் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.