ஆர்யாவின் கேப்டன் படத்தில் இருந்து இமானின் சூப்பரான மெலடி ட்ரீட்: ரசிகர்களை உருக வைத்த ஸ்ரேயா கோஷல்

சென்னை: சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள 'கேப்டன்' படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது.

இந்தப் படம் செப்டம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.

டி. இமான் இசையமைத்துள்ள 'கேப்டன்' படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கலக்கல் ஆர்யா

கலக்கல் ஆர்யா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கி வரும் ஆர்யா, வித்தியாசமான கதைகளை தேர்வுசெய்து நடித்து வருகிறார். பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம், அமேசானில் வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அதேபோல், சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'டெடி' திரைப்படமும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

சூப்பர் ஹிட் கொடுத்த டெடி

சூப்பர் ஹிட் கொடுத்த டெடி

ஆர்யா, சாயிஷா நடிப்பில் கடந்தாண்டு உருவான திரைப்படம் டெடி. சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில், டி இமான் இசையில் உருவாகியிருந்த இப்படம், நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியானது. வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான 'டெடி' படத்திற்கு, ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அதேபோல், இமான் இசையில் பாடல்களும் சூப்ப ஹிட் அடித்தன.

இயக்குநருக்கு கார் பரிசு

இயக்குநருக்கு கார் பரிசு

'டெடி' படத்தை ஸ்டூடியோ கிரின் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியான போதும், தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கொடுத்தது. இதனால் மகிழ்ச்சியான தயாரிப்பாளர், இயக்குநர் சக்தி செளந்தர்ராஜனுக்கு அட்டகாசமான MG கார் ஒன்றை பரிசளித்திருந்தார். இந்த புகைப்படம் இணையத்திலும் வைரலாகி இருந்தது.

Recommended Video

D. Imman & Varalaxmi Sarathkumar | இந்த படத்தின் TOTAL TEAM செட் பண்ணது ARYA தான் | *Kollywood
மீண்டும் இணைந்த ஆர்யா சக்தி செளந்தர்ராஜன்

மீண்டும் இணைந்த ஆர்யா சக்தி செளந்தர்ராஜன்

'டெடி' திரைப்படம், நடிகர் ஆர்யாவுக்கும் சிறப்பான கம்பேக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி தற்போது மீண்டும் 'கேப்டன்' படத்தில் இணைந்துள்ளனர். இந்தமுறை இன்னும் வித்தியாசமான ஜானரில் 'கேப்டன்' படத்தை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆர்யா இப்படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் மிருதன், டிக் டிக் டிக், டெடி என வித்தியாசமான கதைகளை படமாக்கி வருவதால், 'கேப்டன்' படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆர்யா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சிம்ரன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன் என பலரும் நடித்து வருவது, 'கேப்டன்' படத்திற்கு இன்னும் பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு

இமான் - ஸ்ரேயா கோஷல் கூட்டணியில், மெலடியாக மனதை வரும் 'கைலா' பாடலுக்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ரசிகர்கள் அனைவரும் ஸ்ரேயா கோஷலின் குரலை ரொம்பவே பாராட்டி வருகின்றனர். மேலும், இதுபோன்ற பாடல்களை அடிக்கடி பாட வேண்டும் எனவும், அவர்கள் அன்பு கட்டளையிட்டு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

ரெட் ஜெயன்ட்

ரெட் ஜெயன்ட்

இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை, உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதும், கேப்டனின் வெற்றியை உறுதி செய்துள்ளது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், 'கேப்டன்' திரைப்படம் செப்டம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது அதன் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர்.

இமான் கொடுத்த மெலடி ட்ரீட்

இமான் கொடுத்த மெலடி ட்ரீட்

ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் பாடல், இமான் இசையில், யுவன் சங்கர் ராஜா குரலில் வெளியாகி கவனம் ஈர்த்தது. 'நினைவுகள்' எனத் தொடங்கும் இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுதியிருந்தார். யுவன் சங்கர் ராஜா க்யூட்டாக பாடி, ரசிகர்களை சொக்க வைத்துள்ளார். ஃபரண்ட்ஷிப் பாடலாக உருவாகியுள்ள 'நினைவுகள்' பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது 'கைலா' என்ற இரண்டாவது பாடலும் வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி வரிகளில், ஸ்ரேயா கோஷல், யாசின் நிசார் பாடியுள்ள 'கைலா' பாடல், சூப்பரான மெலடியாக உருவாகியுள்ளது.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு

இமான் - ஸ்ரேயா கோஷல் கூட்டணியில், மெலடியாக மனதை வரும் 'கைலா' பாடலுக்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ரசிகர்கள் அனைவரும் ஸ்ரேயா கோஷலின் குரலை ரொம்பவே பாராட்டி வருகின்றனர். மேலும், இதுபோன்ற பாடல்களை அடிக்கடி பாட வேண்டும் எனவும், அவர்கள் அன்பு கட்டளையிட்டு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X