செல்வாக்கை தவறாக பயன்படுத்தும் மாதம்பட்டி ரங்கராஜ்?.. ஜாய் கிரிஸில்டாவுக்கு சிக்கல்?.. விஷயம் எல்லை மீறுதே

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் பிரபல சமையல் கலைஞராகவும்; பிரபலங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு தனது டீமுடன் சமையல் செய்துகொடுப்பவராகவும் திகழ்பவர். அதுமட்டுமின்றி மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே இவரை சுற்றி இரண்டாவது திருமண சர்ச்சை எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் பிரபலமான சமையல் கலைஞராக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். பிரதமர் முதல் தமிழ் சினிமா செலிபிரிட்டிகள்வரை பலருக்கும், அவர்களது வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் சமையல் செய்துகொடுத்திருக்கிறார். இவரது சமையலுக்கு என்று டிமாண்ட் எப்போதுமே இருப்பதுண்டு. அதனை அவரும் சரியாக பயன்படுத்திக்கொண்டு தான் எடுக்கும் ஆர்டர்களில் நேர்த்தியாக சமையல் செய்து நல்ல பெயரை சம்பாதித்துவருகிறார். இதனால் அவருக்கு தமிழ்நாட்டில் நல்ல செல்வாக்கு இருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஹீரோ ரங்கராஜ்: நிலைமை இப்படி சென்றுகொண்டிருக்க இயக்குநர் ராஜுமுருகனின் சகோதரர் சரவணன் இயக்கிய மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமானார் ரங்கராஜ். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக ரங்கராஜின் நடிப்புக்கும் ரசிகர்கள் தங்களது வரவேற்பை கொடுத்தார்கள். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அதற்கு பிறகு பெரிதாக எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை.

Second wife Joy Crizildaa accuses Madhampatty Rangaraj of abusing her influence
Photo Credit:

குக் வித் கோமாளி நடுவர்: வெள்ளித்திரையிலிருந்து ஒதுங்கியே இருந்தாலும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருந்த வெங்கடேஷ் பட் அந்நிகழ்ச்சியிலிருந்து சில காரணங்களால் விலகினார். அவருக்கு பதிலாக ரங்கராஜ் அந்த நிகழ்ச்சியில் நடுவராக களமிறக்கப்பட்டார். தன்னால் முடிந்த அளவுக்கு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார்.

திருமணங்களால் சர்ச்சை: இவர் முதலில் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவையும் இவர் இரண்டாவது திருமணம் செய்த புகைப்படம் வெளியானது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ரங்கராஜ் அதுகுறித்து எந்தவொரு பேச்சும் பேசவில்லை. நிலைமை இப்படி இருக்க ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார் கிரிஸில்டா.

நீதிமன்றம் சென்ற மாதம்பட்டி: அதுமட்டுமின்றி ரங்கராஜை அட்டாக் செய்து போஸ்ட்டுகளையும், வீடியோக்களையும் வெளியிட்டார். இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை தொடர்பான வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் என்று ஜாய் கிரிஸில்டா மீது அவதூறு வழக்கை நீதிமன்றத்தில் தொடுத்திருக்கிறார். இதனால் இந்த விஷயம் மேற்கொண்டு பெரிதானது.

தவறாக பயன்படுத்தும் மாதம்பட்டி?: ரங்கராஜ் நீதிமன்றத்துக்கு போனதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாய் கிரிஸில்டா, 'நான் கொடுத்த புகாரின் மீது எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. மாதம்பட்டி ரங்கராஜுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அதனை தடுக்கிறார். என்னை பற்றி என்னென்னம்மோ எழுதுகிறார்கள். உங்கள் வீட்டில் ஒரு பெண் இருந்து அவருக்கும் என்னை மாதிரி நிலைமை ஏற்பட்டால் இப்படித்தான் எழுதுவீர்களா? என கேள்வி எழுப்பினார். இதனைப் பார்த்த ரசிகர்களோ, 'அய்யோ மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு இருக்கும் செல்வாக்கை தவறாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டாரா?.. இனி ஜாய் கிரிஸில்டாவுக்கு சிக்கல்தானா?.. நீதி கிடைக்குமா? என்ற கேள்வியை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X