»   »  வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை... வெளிவராத ரகசியம்!

வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை... வெளிவராத ரகசியம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
வடசென்னை படத்தின் அப்டேட்ஸ்!- வீடியோ

தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் வடசென்னை. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு வடசென்னை ஏரியாவில் ஏரியாவில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்,

ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளிவந்த 'விசாரணை' படமும் 'லாக்கப்' என்கிற நாவலை அடிப்படையாக வைத்து இயக்கியிருந்தார். தேசிய விருதும், பல உலகப் படவிழாக்களுக்கும் பொய் வந்தது அந்தப் படம். 'வடசென்னை' படத்தின் கதை அங்கே வாழ்ந்துவரும் ஒருவர் சொன்ன சம்பவங்களை தொகுத்து கதையாகியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

Secrets of Vetrimaran's Vada Chennai

வடசென்னை ஏரியாவில் உள்ள மனிதர்களின் வாழ்க்கையை ரத்தமும் சத்தையுமாகப் பதிவு செய்திருக்கிறார். அதற்காக பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார். வடசென்னை ஏரியா எப்போதும் இரவு நேரங்களில்தான் பரபரப்பாக இருக்கும். அந்த நேரத்தில் படப்பிடிப்பு நடத்துவது சவாலான காரியம். நம்முடைய வாழ்க்கையைத்தான் கதையாகப் பண்ணுகிறார்கள் என்பது தெரிந்ததும், அந்த மக்கள் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாது என்று சொல்கிறது வடசென்னை டீம்.

இந்தப் படத்தில் இயக்குநர் அமீர், இயக்குநர் சமுத்திரக்கனி, பொல்லாதவன் கிஷோர், டேனியல் பாலாஜி, பவன், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா தொடங்கி, பல படங்களில் பார்த்த சின்னச் சின்ன கேரக்டர்கள் கூட உயிர்ப்போடு படத்தில் வலம் வருகிறார்களாம். தவிர, இந்த கேரக்டர்கள் அனைவரையும் கன்ட்ரோல் பண்ணுகிற தாதாவாக இயக்குநர் சுப்ரமண்ய சிவாவை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன்.

நிழல் உலகில் என்ன நடக்கிறது என்பதை தத்ரூபமாக வெளிப்படுத்தும் படமாக வடசென்னை இருக்கும்.

English summary
Here is the secrets of Dhanush - Vetrimaran's Vadachennai movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil