»   »  ஏங்க, 12 ரூவா கட்டலைங்க... தூக்கிட்டாங்கே.. கடுப்பாகிக் கிடக்கும் மன்சூர் அலிகான்!

ஏங்க, 12 ரூவா கட்டலைங்க... தூக்கிட்டாங்கே.. கடுப்பாகிக் கிடக்கும் மன்சூர் அலிகான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத்தில் நான் ஆயுள் உறுப்பினர். என்னையே நீக்கிவிட்டனர். 12 ரூபாய் கட்டி புதுப்பிக்கவில்லை என்று கூறி காரணம் கூறி அவர்களுக்குப் பிடிக்காதவர்களை நீக்கிவிடுகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் நீக்கப்பட்டுள்ளார். 1991 கேப்டன் பிரபாகரன் வந்ததில் இருந்தே நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன் . தன்னை நீக்கியதற்கு விளக்கம் அளித்துள்ளார் மன்சூர் அலிகான்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து என்னை ஏற்கனவே நீக்கியிருந்தார்கள்.அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் உறுப்பினர் ஆனேன். இப்போது மீண்டும் என்னை நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். அப்படி நீக்கியதன் மூலம் நான் நடிகர் இல்லை என்றாகி விடாது.

யார் பணம் கட்டுகிறார்கள்?

யார் பணம் கட்டுகிறார்கள்?

நான் வருடம் தோறும் 12ரூபாய் பணம் கட்டவில்லை என்று தூக்கியுள்ளார்கள், அப்படி சங்கத்தில் எந்த விதிமுறையும் இல்லை. சிம்பு கூட பணம் கட்டுவதில்லை. இத்தனை வருடம் நடிகர் சங்கத்தில் இருந்த எனக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்கள் நிலைமை என்ன என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

பாண்டவர் அணி ஜெயிக்கும்

பாண்டவர் அணி ஜெயிக்கும்

நடிகர் சங்கத்தில் இல்லையென்றாலும் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் நான் இருக்கிறேன். தயாரிப்பாளர்கள் என் பக்கம் இருப்பார்கள்.நடைபெற இருக்கும் நடிகர் சங்க தேர்தலில், பாண்டவர் அணி வெற்றி பெறும். நடிகர் சங்கம் நல்ல எதிர்காலத்தை நோக்கி போகும்.

சங்க பணத்தில் ஊழல்

சங்க பணத்தில் ஊழல்

நடிகர் சங்கத்தில் பிளவுகள் எல்லாம் இல்லை. வரும் 16ம் தேதி நான் நடித்த அதிரடி படம் வரும். இவர் நடிகர் சங்கத்தில் நீக்கிவிட்டால் நான் நடிகன் இல்லை என்றாகிவிடாது. பாண்டவர் அணிக்கு பிரச்சாரம் தேவையில்லை. அவர்கள் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ரூ.12 லட்சம் கணக்கு காட்டுகின்றனர். இதிலிருந்தே அவர்கள் செய்துள்ள ஊழல் வெளியே வந்துள்ளது.

நல்லது நடக்கும்

நல்லது நடக்கும்

ஆண்டிமடம் போலத்தான் இருக்கிறது சரத்குமார் தலைமையிலான அணி. எந்த பதிலும் தருவதில்லை. நான் ஆயுள் உறுப்பினர். என்னையே நீக்கிவிட்டனர். அவர்களுக்குப் பிடிக்காதவர்களை நீக்கிவிடுகின்றனர். நான் ஒரு அமைப்பையே உருவாக்கியிருக்கிறேன். ராதாரவி ஜெயிக்கப் போவதில்லை. விஷால் அணி கட்டிடம் கட்டி கொடுக்கின்றனர். நாடக நடிகர்களுக்கு நல்லது நடக்கும்.

ரவுடிகள் ராஜ்ஜியம்

ரவுடிகள் ராஜ்ஜியம்

நடிகர் சங்கத்தில் இல்லாவிட்டால் என்னை யாரும் நடிக்க கூப்பிட மாட்டார்களா என்ன? எனக்கு ஓட்டு போட அனுமதித்தால் நான் ஓட்டு போடுவோன். நடிகர் சங்க பொதுக்குழுவில் இப்போது ரவுடிகள்தான் இருக்கின்றனர். சரத்குமாரின் அடிவருடிகளின் கூடாரம்தான் தற்போது நடிகர் சங்கத்தில் இருக்கிறது. விஜயகாந்த் தலைமையில் இருந்த போது நன்றாகத்தான் இருந்தது. ராதாரவி கூட சேர்ந்த உடன்தான் கெட்டவராக மாறிவிட்டார் சரத்குமார்.

எங்கும் ஓடமாட்டேன்

எங்கும் ஓடமாட்டேன்

கண்டிப்பாக இந்த முறை விஷால் அணியினர் தான் வெற்றிப்பெறுவார்கள். அதில் மாற்று கருத்தே இல்லை. மேலும், அவர்கள் வெற்றிப்பெற்றால் தான் நாடக நடிகர்களுக்கு ஒரு விடிவுகாலம். என்னை சங்கத்தில் இருந்து தூக்கியதால் நான் எங்கும் ஓடிவிட மாட்டேன், அதை எதிர்த்தும் போராட மாட்டேன், என்றார்.

English summary
Actor Mansoor Ali Khan has said that the nadigar sangam has sacked him not paying Rs 12 as membership fee.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil