»   »  அசின் மாதிரின்னு சொன்னா அசினையே மனைவியாக்கும் ராகுல்

அசின் மாதிரின்னு சொன்னா அசினையே மனைவியாக்கும் ராகுல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கஜினி இந்தி ரீமேக்கை பார்த்த மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவின் சகோதரி அவரிடம் வந்து அந்த ஹீரோயின் போன்று ஒரு பெண்ணை தேடிக் கண்டுபிடி என்று தெரிவித்தாராம்.

பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவை காதலித்து வருகிறார். அவர்கள் தங்கள் காதலை திருமணம் வரை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். அவர்களை சேர்த்து வைத்த புண்ணியம் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை சேரும்.

இந்நிலையில் ராகுல் பற்றி அசின் கூறுகையில்,

கஜினி

கஜினி

ராகுல் ஷர்மாவின் சகோதரி கஜினி இந்தி ரீமேக் படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு அவர் ராகுலிடம் வந்து ஏய், இந்த படம் உன் கதையைப் போன்றே உள்ளது. என்ன ஒன்று உன் வாழ்வில் ஒரு பெண் மட்டும் இல்லை. அந்த படத்தில் வருவது போன்று ஒரு பெண்ணை தேடிக் கண்டுபிடி என்று ராகுலிடம் தெரிவித்துள்ளார்.

மைக்ரோமேக்ஸ்

மைக்ரோமேக்ஸ்

படத்தில் வரும் ஆமீர் போன்று ராகுலும் அப்போது தனது நிறுவனத்தை இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனமாக ஆக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தார்.

கார்

கார்

ஆமீர் கான் நிஜ வாழ்க்கையில் என்ன காரை பயன்படுத்தினாரோ அதே காரை தான் ராகுலும் அப்போது பயன்படுத்தினார். படத்தை போன்றே மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறமும் ஆரஞ்சு ஆகும்.

அசின்

அசின்

கஜினி படத்தில் வரும் ஹீரோயின் போன்று ஒரு பெண்ணை கண்டுபிடி என்று தான் ராகுலிடம் கூறினேன். அவர் என்னவென்றால் அந்த ஹீரோயினையே தனது மனைவியாக்க உள்ளார் என்று ராகுலின் சகோதரி என்னிடம் தெரிவித்தார்.

முருகதாஸ்

முருகதாஸ்

முருகதாஸ் தமிழ் மற்றும் இந்தி கஜினியில் ஹீரோயின் இறந்துபோவது போன்று காட்சி வைத்தார். மூன்றாவது முறையாக அந்த படத்தை எடுத்தாலாவது ஹீரோயின் இறக்காமல் இருக்கும்படி கதை எழுதுமாறு நான் அவரை கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் அசின்.

English summary
Micromax founder Rahul Sharma's sister told him to get a girl like Ghajini heroine.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil