LIK: தலைவர் 189லாம் ஓகே.. எங்க ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானை எங்கே காணோம்.. கடுப்பான ரசிகர்கள்!
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் எல்ஐகே திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதன் டீசர் வெளியானது. ஆனால், அதில், சீமானை காட்டவில்லை என அவரது ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.
சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான போடா போடி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் தான் விக்னேஷ் சிவன். விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் அந்த படத்தின் ஷூட்டிங்கின் போதே நயன்தாராவை காதலிக்கத் தொடங்கினார்.

பல வருடங்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துக் கொண்டனர். வாடகைத்தாய் மூலமாக உயிர் மற்றும் உலகம் என இரு குழந்தைகளை பெற்று வளர்த்து வருகின்றனர். எல்ஐகே திரைப்படம் இத்தனை ஆண்டுகள் எடுக்க என்ன காரணம் என யோசித்த ரசிகர்களுக்கு அதன் கதை தான் என்பது டீசரை பார்த்த நொடியிலேயே புரிந்திருக்கும்.
வித்தியாசமான படங்கள்: தமிழ் சினிமாவில் போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் என வித்தியாசமான படங்களை கொடுத்து வந்த விக்னேஷ் சிவன் அடுத்து என்ன வித்தியாசமான படத்தைக் கொடுக்கப் போகிறார் என ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருந்த நிலையில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற ஃப்யூரிஸ்டிக் காதல் கதையை படமாக கொடுக்கவே இத்தனை வருடங்கள் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது டீசரை பார்த்ததும் ரசிகர்கள் புரிந்துக் கொண்டிருப்பார்கள்.
பிரதீப் ரங்கநாதனுக்கு தீபாவளி கிஃப்ட்: டிராகன் படத்தைத் தொடர்ந்து இந்த தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனுக்கு தீபாவளி கிஃப்ட்டாக எல்ஐகே மற்றும் டூட் என இரு படங்கள் ஒரே நாளில் வெளியாகப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இரு படங்களின் தயாரிப்பு நிறுவனமும் விட்டுக் கொடுக்க மனமே இல்லாமல் தீபாவளிக்கு எப்படியாவது ஒட்டுமொத்த கூட்டத்தையும் பிரதீப் ரங்கநாதன் பக்கம் திருப்பிவிட வேண்டும் என்கிற முடிவில் உள்ளனர்.
தலைவர் 189: மிஷன் இம்பாசிபிள் 14ல் யஷ் ஹீரோவாக நடிக்கும் போஸ்டர், அடையாளு மேம்பாலம் ஹைடெக்காக இருப்பது, ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை பிரம்மாண்டமாக காட்சியளிப்பது, குடைக்குள் வானிலை அறிக்கை, தலைவர் 189 போஸ்டர், ஹாலிவுட் ஸ்டைலில் கோலிவுட் என விக்னேஷ் சிவன் தனது ஒட்டுமொத்த லா லா லேண்ட் கற்பனைகளையும் செதுக்கி வைத்திருக்கிறார். ஹாலிவுட் படங்களில் எதிர்கால அமெரிக்கா எப்படி இருக்கும் என்றெல்லாம் பார்த்த ரசிகர்களுக்கு எதிர்கால சென்னை எப்படி இருக்கும் என விக்னேஷ் சிவன் காட்டியது சிறப்பு.
சீமான் எங்கே காணோம்: பந்தியில் தலைவாழை இலை போட்டு உப்பு, ஊறுகாய், அப்பளம், சாதம், சாம்பார், வத்தக் குழம்பு, ரசம், மோர் வரை வைத்தாலும் கடைசியாக பாயாசம் எங்கேப்பா காணோம் என சிங்கம்புலி கேட்பது போலத்தான் சீமான் ரசிகர்கள் தற்போது டீசரில் சீமானை காட்டவே இல்லையே என கேள்வி எழுப்பியுள்ளனர். சூர்யாவின் கருப்பு டீசரில் ஹீரோயின் த்ரிஷா உள்ளிட்ட யாரையுமே காட்டவில்லை. அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக அந்த டீசர் வெளியானது. பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, க்ரித்தி ஷெட்டி, ஷாரா உள்ளிட்ட பலரை காட்டியுள்ள நிலையில், சீமானை காட்டாமல் விக்னேஷ் சிவன் ஏன் விட்டு விட்டார் என ரசிகர்கள் கேட்டு வருவது புரிகிறது. கண்டிப்பாக, டிரைலரில் சர்ப்ரைஸாக சீமான் இடம்பெறுவார் என்றே நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications











