twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசையையும், கலையையும் பிரித்துவிட்டு மொழி தனித்து இயங்க முடியாது! - சீமான்

    By Shankar
    |

    இசையையும், கலையையும் பிரித்துவிட்டு மொழி தனித்து இயங்க முடியாது என்று சீமான் கூறினார்.

    கல்லூரி, தென்மேற்கு பருவக் காற்று, பரதேசி போன்ற படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் செழியன் இப்போது ஒரு இசைப் பள்ளியைத் தொடங்கியுள்ளார். இந்தப் பள்ளி சென்னை, சாலிகிராமத்தில் THE MUSIC SCHOOL என்ற பெயரில் தொடங்கப் பட்டுள்ளது.

    கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ரிப்பன் வெட்டி கல்லூரியைத் தொடங்கி வைத்தார்.

    இதில் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், இயக்குனருமான சீமான், இயக்குநர் பாலா, பாடகர் மனோ, இயக்குநர் மிஷ்கின் மற்றும் ஓவியர் மருது ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.

    சீமான் பேச்சு

    சீமான் பேச்சு

    நிகழ்ச்சியில் இயக்குனர் சீமான் பேசுகையில், "இசை என்பது மொழி, நாடு, இனம் கடந்தது என்பார்கள். ஆனாலும் ஒரு மொழி இசையையும், கலையையும் பிரித்துவிட்டு தனித்து இயங்க முடியாது. இலக்கியத்தையும், கலையையும், இசையையும் பிரித்துவிட்டால் மொழிக்கு சிறப்பில்லை.

    மாற்றம்

    மாற்றம்

    ஒரு காலத்தில் தமிழர்கள் கலைகளை ‘கூத்து' என்று இழிவாக எண்ணிப் புறந்தள்ளினார்கள். கூத்து, நாடகம், பாட்டு, என்பதனை புறக்கணித்ததன் விளைவு, இன்று வலிமைமிக்க திரை ஊடகத்தினைக் கூட பிறமொழி பேசுவோர் ஆக்கிரமித்து விட்டனர். ஆனால் கால மாற்றத்தில் இப்போது நிலைமை சற்று மாறியுள்ளது. இசையை ஒரு கல்வியாக பார்க்கும் சூழல் இன்று வந்துள்ளது.

    இசைஞானி

    இசைஞானி

    எங்கோ பண்ணைப்புரத்திலிருந்து வந்து இசைஞானி இசையில் சாதனை படைத்தார். அதேபோல எங்கோ சிவகங்கையில் பிறந்த செழியன் தனக்குத் தெரிந்த இசையறிவை இந்தத் தலைமுறைக்கு கொடுக்க விரும்பி இந்த இசைப் பள்ளியை தொடங்கியுள்ளார். இதை நிர்வகிப்பது அவருடைய மனைவி என்றாலும் செழியனின் பங்களிப்பு பெரிதும் உள்ளது. இதற்காக பல நூல்களை பல பாகங்களாக எழுதியுள்ளார்.

    இசையை கல்வியாக

    இசையை கல்வியாக

    இன்றைய தமிழ்ச் சமூகம் இசையை ஒரு கல்வியாகப் பயின்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தருணத்தில், 'ஓர் இசைப்பள்ளி தொடங்கும்போது பல மனநல மருத்துவ மனைகள் மூடப்படுகின்றன' என்கிற கவிஞன் அறிவுமதியின் கருத்தினை நான் வழிமொழிகிறேன். இந்த இசைப் பள்ளி முயற்சியை வாழ்த்துகிறேன்," என்றார்ய

    தமிழச்சி தங்கபாண்டியன்

    தமிழச்சி தங்கபாண்டியன்

    கவிஞர் தமிழச்சி பேசும்போது, "கவிதைக்கு மொழி ஆடை கட்டுகிறது என்றால், இசை இறக்கை கட்டுகிறது என்பார்கள். இசையறிவு ஒரு மகா சக்தியாகும். ஓர் இசைப்பள்ளி தொடங்குவது ஒரு நூலகம் தொடங்குவதற்குச் சமம்.

    ஈரான் கைது

    ஈரான் கைது

    ஈரான் நாட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அறிந்து வியப்பு கொண்டேன். சீனப்பேமாட் என்கிற ஒரு மரணதண்டனை கைதியிடம் உன்னுடைய கடைசி ஆசை என்ன? என்று கேட்டபோது அவன், "எனக்கு மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளில் பிரபலமான ‘மே' என்கிற புல்லாங்குழலை வாசிக்க வேண்டும்" என்றானாம். அங்கு அவனால் கொலையுண்டவரின் குடும்பத்தாரும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை பார்க்க வந்திருக்கிறார்கள் அவன் வாசித்த புல்லாங்குழல் இசையைக் கேட்டு அவர்கள் மனமுருகி நின்றார்கள்.

    மரணத்திலிருந்து விடுவித்த இசை

    மரணத்திலிருந்து விடுவித்த இசை

    அந்த நாட்டின் சட்டப்படி பாதிக்கப்பட்டவரின் ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்கள் ‘பிளட் மணி' எனப்படும் தொகையை செலுத்தினால் மரண தண்டனையைத் தடுத்து நிறுத்தி வைக்கலாம் என்பது மரபு. அப்படி. 17 வயதே ஆன அவனை மரண தண்டனையிலிருந்து விடுவித்தார்கள். இதிலிருந்து இசையின் மகத்துவத்தை உணரலாம்.

    லெனினைக் கவர்ந்த பீத்தோவன் இசை

    லெனினைக் கவர்ந்த பீத்தோவன் இசை

    லெனின் இசையை எதிர்த்தவர் என்று கூறுவார்கள். ஆனால் அவர் பீத்தோவன் இசையைக் கேட்டு மனித ஆற்றலுக்கு இவ்வளவு சக்தியா என்று வியந்திருக்கிறார். நுண்கலைகளில் இசைக்கு தனித்துவம் உண்டு. தமிழர்கள் மரபே இசை சார்ந்ததுதான் தாலாட்டு முதல் ஒப்பாரி வரை நமக்கு இசை மரபு உள்ளது.. நமது இசைக்கு நாட்டார் பாடல்கள் தொடங்கி நமக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

    செழியனின் புத்தகங்கள்

    செழியனின் புத்தகங்கள்

    ஒளிப்பதிவாளர் செழியனின் இன்னொரு முகம் பலரும் அறியாதது. அவர் இசை தொடர்பாக இதுவரை 15 நூல்களை எழுதி இருக்கிறார். அவரது மனைவி பிரேமா தொடங்கியுள்ள இந்த இசைப் பள்ளியில் மேற்கத்திய இசையுடன் நம் இசையும் கற்றுத் தரப்படுவதாக அற்கிறேன். இம்முயற்சி வரவேற்கத் தக்கது. வாழ்த்துக்கள்," என்றார்.

    இந்த பள்ளியில் அனைத்து இசைக் கருவிகளையும் இசைக்க பயிற்சி அளிக்கப் படுகிறது.

    English summary
    Naam Tamilar Chief Seeman inaugurated the music school of ace cinematographer Chezhian's Music School.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X