»   »  தமிழ்ல பேசலன்னா கொன்னேபுடுவேன்- 'கன்னுக்குட்டி' பூஜாவிடம் செல்லமாய் கோபித்த சீமான்!

தமிழ்ல பேசலன்னா கொன்னேபுடுவேன்- 'கன்னுக்குட்டி' பூஜாவிடம் செல்லமாய் கோபித்த சீமான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு பூஜா நடிக்கும் விடியும் முன் பேசு படத்தின் விழாவில் தமிழில் பேசாவிட்டால் கொன்னேபுடுவேன் என்று செல்லமாய் மிரட்டினாராம் இயக்குநர் சீமான்.

'நான் கடவுள்' படத்துக்குப் பின் வேறு படங்களில் நடிக்காமல் இருந்தார் பூஜா. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்போது அவர் நடிக்கும் படம் 'விடியும் முன்'.

நான் கடவுளுக்குப் பிறகு

நான் கடவுளுக்குப் பிறகு

இதன் இசை வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேபில் நடந்தது. பத்திரிகையாளர்கள் மத்தியில் நடந்த இந்த விழாவில் பேசி பூஜா, "நீண்ட நாட்களுக்குப் பிறகு பழகிய முகங்களைப் பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. நான் கடவுளுக்குப் பிறகு நான் எதிர்ப்பார்த்த மாதிரி வந்த கதை இதுதான்.

சீமானின் கன்னுக்குட்டி

சீமானின் கன்னுக்குட்டி

இன்று காலை படத்தின் போஸ்டர்களைப் பார்த்து சீமான் என்னிடம் தொலைபேசியில் வாழ்த்திப் பேசினார். 'என்ன கன்னுக்குட்டி, வாழ்த்துக்கள். விழாவில் போய் ஆங்கிலத்தில் பேசினால் கொலை பண்ணிடுவேன். தமிழில் பேசு' என்றார். அவரிடமிருந்து முதல் வாழ்த்து வந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம். (சீமான் இயக்கிய தம்பி படத்தில் பூஜா நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தகது.)

பரதேசி மிஸ்ஸானது

பரதேசி மிஸ்ஸானது

நான் கடவுள் படத்தில் நடித்து முடித்த பிறகு நான் அடுத்த படங்களுக்காக காத்திருந்தேன். அது எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்று எனக்கே தெரியவில்லை. பாலாவின் 'பரதேசி' படத்தில் நான் நடிப்பதாக இருந்தது. திரையுலகம் ஸ்ட்ரைக், படம் தாமதம் என படபிடிப்பு தள்ளிப் போனது. அந்த நேரத்தில் தான் 'விடியும் முன்' படத்தின் கதையை இயக்குனர் பாலாஜி கே.குமார் என்னிடம் சொன்னார்.

பாலா பாராட்டு

பாலா பாராட்டு

உடனே பாலா சாருக்கு போன் பண்ணி ‘சார், மன்னிச்சுடுங்க... விடியும் முன் படத்துக்கு நான் கால்ஷீட் கொடுத்துவிட்டேன். அதனால் பரதேசியில் நடிக்க முடியாது' என்றேன். பாலா சார் கொஞ்சம் கூட கோபப்படாமல் ‘சரி, நல்ல கதைன்னு சொல்ற, அந்த படத்துலயே நடி. உனக்கு என்னோட வாழ்த்துக்கள்' என்று பாராட்டினார். பாலா சாருக்கு என் மனமார்ந்த நன்றிகளை சொல்லவேண்டும்.

அனைத்துக்கும் பதில்

அனைத்துக்கும் பதில்

நான் கடவுள் படத்திற்குப் பிறகு எந்த தொலைப்பேசி அழைப்பையும் எடுப்பதில்லை, அடுத்தப் படம் என்ன? என்பது தான் எல்லோருடைய கேள்வியாகவும் இருந்தது. எனக்கும் அதே கேள்வி தான் இருந்தது தவிர, என்னிடம் பதில் இல்லை. அதற்கெல்லாம் விடை இப்போது வந்துவிட்டது. 'விடியும் முன்' சிறந்த படமாக இருக்கும்," என்றார்.

எங்கே போயிருந்தார்?

எங்கே போயிருந்தார்?

நான் கடவுள் படத்துக்குப் பிறகு பெங்களூர் போய்விட்ட பூஜா, ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டதாகவும், திருமணத்துக்குத் தயாராவதாகவும் கூறப்பட்டது. பின்னர் இலங்கை, ஆஸ்திரேலியா என்று பறந்து கொண்டிருந்தவர் இபபோது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

English summary
Actress Pooja says that she is waiting for a good script like Vidiyum Munn after Naan Kadavul.
Please Wait while comments are loading...