»   »  மு களஞ்சியம் இயக்கத்தில் சீமான்.. கம்யூனிஸ்ட் மகேந்திரன் மகன் அறிமுகம்!

மு களஞ்சியம் இயக்கத்தில் சீமான்.. கம்யூனிஸ்ட் மகேந்திரன் மகன் அறிமுகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஞ்சலியைத் துரத்தித் துரத்தி ஓய்ந்த மு களஞ்சியம் மீண்டும் சினிமா இயக்கத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். அந்த ஊர்சுற்றிப் புராணத்தை கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது புதிய படத்தை அறிவித்துள்ளார். தலைப்பு: முந்திரிக்காடு.

இதில் சீமான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுள் ஒருவரான சி மகேந்திரனின் மகன் புகழ் நாயகனாக அறிமுகமாகிறார்.

Seeman in Kalanjiam's Munthirikkadu

கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன் , பாவாலட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஏஆர் ரஹ்மானின் இசைப் பள்ளி மாணவர் ஏகே பிரியன் இசையமைக்க. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் மு களஞ்சியம்.

படம் குறித்து இப்படிச் சொன்னார் களஞ்சியம்:

"முந்திரிக்காட்டு மக்களின் வாழ்கை யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலையுயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதும், அங்கே காதல் வயப்பட்ட இருவரின் காதலுக்கு ஊரே எதிர்ப்பு தெரிவிக்க, காக்கி சட்டைக்கே உரிய கௌரவத்தை காப்பாற்றும் அன்பரசன் அந்த காதலர்களை சேத்து வைக்க எடுத்த முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் கதை.

Seeman in Kalanjiam's Munthirikkadu

படப்பிடிப்பு தஞ்சை மாவட்டம், நெல்லை மாவட்டம் மற்றும் ஆந்திராவின் நகரி மற்றும் சென்னை போன்ற இடங்களிள் 40 நாட்கள் நடைபெற்றுள்ளது. கடலூர், பாண்டி உள்ளிட்ட இடங்களில் மீதிப் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது."

English summary
Director Seeman is playing key role in Mu Kalanjiam's new movie titled Munthirikkadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil