Don't Miss!
- News
தேனிலவில் ஷாக்.. குதிரையில் ஏறிய புதுமாப்பிள்ளை.. அடுத்து நொடி நடந்த "சம்பவம்".. அலறிய மணப்பெண்!
- Finance
இந்தியாவின் முதல் பட்ஜெட்..? நிர்மலா சீதாராமன் பட்ஜெட் சாதனை..! #Budget2023
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இதுக்கு தான் போடணும் ‘அரபிக்குத்து‘... எதைச் சொல்கிறார் சீமான் !
சென்னை : இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அரபிக்குத்து பாடல் குறித்து நகைச்சுவையாக பேசினார்.
குறிஞ்சாங்குளத்தில் தமிழர் வழிபாட்டு உரிமை மீட்கப் போராடி உயிர் நீத்தவர்களுக்கு 30ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
குத் வித் கோமாளி 3 ல் என்ட்ரி கொடுக்கும் டாப் ஹீரோ... சர்ப்ரைஸ் ஆன ரசிகர்கள்
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான், நீட் தேர்வு குறித்து பேசினார்

தரம் இல்லாத மருத்துவர்களா?
நீட் தேர்வு எப்படி தரமான மருத்துவர்களை உருவாக்கும்? அப்போது நீட் தேர்வுக்கு முன்னர் மருத்துவர்கள் ஆனவர்கள் எல்லாம் தரம் இல்லாத மருத்துவர்களா? என்று கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு வடஇந்தியர்களுக்கு இந்தியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. 700பேர் தேர்வு எழுதினால் 600 பேரும் தேர்ச்சி பெற்றதாக தகவல் வருகிறது.

தனி பாட திட்டத்தை தொடங்குங்கள்
நாங்கள் இதுவரை வைத்து இருந்தது நுழைவுத் தேர்வு , இவர்கள் சொல்வது தகுதித் தேர்வு. தகுதியை நீட் எழுதினால்தான் வரும் என்றால், எதற்கு பிளஸ் 1, பிளஸ் 2. இதை அப்படியே தூக்கிவிட்டு நீட்டுக்குனு தனி பாடதிட்டத்தை உருவாக்கி இதையே படித்துவிட்டு வாங்க என்று சொல்லிவிடலாமே என்றார் சீமான்.

தனியார் முதலாளிகள்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி சீமான், தனியார் முதலாளிகளின் மருத்துவக் கொள்ளையை தடுக்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால், மோடி அவர்கள் தனியார் முதலாளிகள் அனைவரும் வாருங்கள் மருத்துவக்கல்லூரியை தொடங்குகள் என்று எதற்கு கூவி கூவி தனியார் முதலாளிகளை அழைக்கிறார். அப்படி வரும் தனியார் முதலாளிகள் மக்கள் சேவைக்காக வருவார்களா? லாபம் ஈட்ட வருவார்களா ?
Recommended Video

வேறு விதமாக ஆடனும்
நீட்டுக்கு எதிராக ஏன் கல்வி நிறுவனங்கள் போராடவில்லை, நாங்கள் தான் போராடிக்கொண்டு இருக்கிறோம். ஏன் என்றால் எந்த பாதிப்பும் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு இல்லை. இதற்கு வேறு விதமான ஆட்டத்தை காட்ட வேண்டும், பீஸ்ட் திரைப்படத்தில் வரும் அரபிக்குத்துப் போல ஒன்னு போட்டாத்தான் சரிபட்டு வரும் என்று சீமான் கூறினார்.