»   »  ஜி.வி.பிரகாஷ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் சீமான்!

ஜி.வி.பிரகாஷ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் சீமான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க 'அடங்காதே' படத்தை 'ஜாக்சன் துரை' படத்தைத் தயாரித்த ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கும் இப்படத்தில் சுரபி கதாநாயகியாக நடிக்கிறார்.

'அடங்காதே' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்க, பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்து வருகிறார். சரத்குமார், பாலிவுட் நடிகை மந்திரா பேடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் வட இந்தியாவில் உள்ள மதுரா, காசி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

Seeman play guest role in adangathey

இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள மந்திரா பேடி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு திருச்சியில் நடைபெற்று நேற்று முன்தினம் முடிவடைந்தது. தம்பிராமையா, யோகிபாபு ஆகியோரும் திருச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் இயக்குனரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் நடிக்கிறார். இந்தத் தகவலை நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
GV Prakash, Surabhi, Thambi Ramaiya and Yogi Babu are acting in the film 'Adangathey'. Actor Sarath Kumar and Bollywood actress Manthra Bedi are doing important roles. In this film, Seeman plays a guest role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil