»   »  விதார்த் நடிப்பில் உருவாகும் "சீமத்தண்ணி"... படபூஜையுடன் தொடக்கம் - வீடியோ

விதார்த் நடிப்பில் உருவாகும் "சீமத்தண்ணி"... படபூஜையுடன் தொடக்கம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அறிமுக இயக்குனர் விஜய்மோகன் இயக்கத்தில் உருவாகும் சீமத்தண்ணி படப்பிடிப்பு படபூஜையுடன் தொடங்கியுள்ளது.

விதார்த், விஜய் வசந்த் நடிப்பில் உருவாகும் படம் "சீமத்தண்ணி". இந்தப் படத்தை கிரேட் எம்பரர் புரொடக்‌ஷன்ஸ் எனும் புதிய படநிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக வெளிவர உள்ளது. இந்தப் படத்தை பல முன்னணி இயக்குனரிகளிடம் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை மற்றும் இணை இயக்குனர்களாக பணியாற்றி விஜய் மோகன் இயக்குகிறார். திரைக்கதை, வசனம், எழுதி இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் விஜய்மோகன்.

Seemathanni film Pooja video

மைனா திரைப்பட கதாநாயகன் விதார்த், விஜய் வசந்த கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மலர்விழி எனும் முக்கிய பாத்திரத்தில் கதாநாயகியாக சாந்தினியும், மற்றொரு கதாநாயகியாக சுபிக்‌ஷாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் யோகிபாபு, ஹலோ கந்தசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ரேஷன் கடை ஒன்றை தனது தாய் வீடான நினைத்து வாழும் 2 ஆதரவற்ற நண்பர்களும், வீடுகளில் வேலை பார்க்கும் தங்கமாரி எனும் கதாபாத்திரத்திற்க்கும் இடையில் நடக்கும் வாழ்க்கை பதிவுகளே கதைக்களம்.

எதார்த்த வாழ்வின் நிகழ்வுகளை அனைவரும் ரசிக்கும் வகையில் இயக்குனர் விஜய் மோகன் படமாக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த படப்பிடிப்பு பூஜையுடன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சற்குணம் படப்பிடிப்பின் முதல் காட்சியை கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

English summary
A New director's film Seemathanni star casting by actor Vidhardh started shhoting with the film pooja.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil