சொந்த பட விழாவிற்கே வராமல் தவிர்த்த கரு.பழனியப்பன்...காரணத்தை உடைத்த சீனு ராமசாமி
சென்னை : தான் ஹீரோவாக நடித்த படத்தின் விழாவிற்கே கரு.பழனியப்பன் வராமல் தவிர்த்ததை மேடையில் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்தார் சீனு ராமசாமி. இதற்கு காரணம் என்ன என்பதை மேடையிலேயே அம்பலப்படுத்தவும் செய்தார் சீனு ராமசாமி.
புதுமுக இயக்குனரான சந்திரா தங்கராஜ் எழுதி, இயக்கி வரும் படம் கள்ளன். எழுத்தாளரான சந்திரா, டைரக்டர் ராம் மற்றும் அமீரிடம் அசிஸ்டென்டாக பணியாற்றியவர். ஸ்ரீ மாசாணியம்மன் பிக்சர்ஸ் பேனரில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்தில் கரு.பழனியப்பன், நித்தியா, மாயா, செளந்தர் ராஜன், நமோ நாராயணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கே இசையமைத்துள்ளார்.

கரு.பழனியப்பன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தின் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. ஆனால் அதற்கு கரு.பழனியப்பன் வரவில்லை. இதனை மேடையில் பேசிய போது குறிப்பிட்ட சீனு ராமசாமி, ஒரு நல்ல சிந்தனைவாதி, தமிழ் மீது பாசம் கொண்டவரான கரு.பழனியப்பன் விழாவிற்கு வராமல் தவிர்த்தது வேதனை அளிக்கிறது என்றார்.
இந்த மாதிரி ஒரு படத்தில் கதைக்கு ஒப்புக் கொண்டு தானே நடித்தார். பிறகு ஏன் வரவில்லை. கரு.பழனியப்பன் கண்டிப்பாக விழாவிற்கு வந்திருக்க வேண்டும். ஏன் ஏதாவது முரண்பாடா என மேடையிலேயே டைரக்டரை பார்த்து கேட்டார் சீனு ராமசாமி. டைரக்டரும் ஆமாம் என்பது போல் தலையசைத்தார். என்னதான் முரண்பாடாக இருந்தாலும் அவர் வந்திருக்க வேண்டும். எங்களை போன்ற ஆட்களிடம் ஐடியா கேட்டிருந்தீர்கள் என்றால் எப்படியாவது அவரை வரவைத்திருப்போம் என்றார்.
கரு.பழனியப்பன் கட்சி சார்ந்த பணிகளில் இருப்பதால் கட்சி சார்ந்த நிர்வாகிகள், முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் யாரையாவது விழாவிற்கு அழைத்திருந்தால், என்ன முரண்பாடாக இருந்தாலும் அதை மீறி கட்சி சார்ந்து அவரை வரவைத்திருக்கலாம் என ஐடியாவும் சொன்னார் சீனு ராமசாமி.


Click it and Unblock the Notifications











