»   »  அம்மாவை கண்டித்து ட்வீட் போட்ட இயக்குனர் சீனு ராமசாமி: எல்லாம் பாசம்!

அம்மாவை கண்டித்து ட்வீட் போட்ட இயக்குனர் சீனு ராமசாமி: எல்லாம் பாசம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது அம்மாவை செல்லமாக கண்டித்து ட்வீட் போட்டுள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி.

பரத், சந்தியா, பாவனா நடித்த கூடல் நகர் படம் மூலம் இயக்குனர் ஆனவர் சீனு ராமசாமி. அவர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று மூன்று தேசிய விருதுகளை பெற்றது.

Seenu Ramasamy condemns his mom

தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக சரண்யா பொன்வண்ணனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும், வைரமுத்துவுக்கு சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருதும், சிறந்த தமிழ் படத்திற்கான விருதும் கிடைத்தது.

இந்நிலையில் சீனு ராமசாமி தனது தாயை கண்டித்து ட்வீட் போட்டுள்ளார். தாயின் மீது வைத்துள்ள அதிக பாசத்தால் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இந்த அற்பன் சினு ராமசாமி வாழ வேண்டுமென்று எனக்கு தெரியாமல் திருப்பதி போன அம்மாவை கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

English summary
Director Seenu Ramasamy tweeted condemning his mother for visiting Tirupati without his knowledge to pray for his welfare.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil