»   »  விஜய் சேதுபதி படத்துக்கு முன்பாக சீனு ராமசாமியின் புதிய படம் - அப்பா பாட்டு மகனுக்கு டைட்டில்!

விஜய் சேதுபதி படத்துக்கு முன்பாக சீனு ராமசாமியின் புதிய படம் - அப்பா பாட்டு மகனுக்கு டைட்டில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சீனுராமசாமி இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் அதர்வா முரளி நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு 'ஒரு ஜீவன்அழைத்தது' என்று பெயரிடப்பட்டுள்ளது.

'தர்மதுரை' படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதியும், சீனு ராமசாமியும் இணையவிருந்தனர்.

இவர்கள் இணையும் புதிய படத்திற்கு 'மாமனிதன்' என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி அதிகமான படங்களில் நடித்து வருவதால் இந்தப் புதிய படத்தை தொடங்க காலதாமதம் ஏற்பட்டது.

அதற்கிடையே ஒரு படம் :

அதற்கிடையே ஒரு படம் :

இதனையடுத்து இயக்குநர் சீனு ராமசாமி ‘மாமனிதன்' படத்துக்கு முன்னதாக அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் அதர்வா கல்லூரி மாணவனாக நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

முரளி பாடல் டைட்டில் :

முரளி பாடல் டைட்டில் :

முரளி நடித்த படத்தில் வரும் 'ஒரு ஜீவன் அழைத்தது...' பாடலின் வரிகளை அவரது மகன் அதர்வாவின் படத்துக்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். அதர்வா நடிப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டதா இல்லை டைட்டிலுக்காக அதர்வா தேர்வு செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை.

கிராமத்துப் பின்னணி :

கிராமத்துப் பின்னணி :

கிராமத்துப் பின்னணியில் நடக்கும் த்ரில்லர் கதையாம் இது. திருச்சியைச் சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு நடக்குமென்றும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

கதாநாயகி தேர்வு :

கதாநாயகி தேர்வு :

இந்தப் படத்துக்கு கதாநாயகி, மற்ற நடிகர்கள் யார் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சீனு ராமசாமி, விஜய் சேதுபதியை இயக்குவார் எனத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Vijay Sethupathi and Seenu Ramasamy would be joining the movie 'Maamanithan' after 'Dharmadurai'. Vijay Sethupathi has acted in more films and this new film was delayed. Meanwhile, Seenu Ramasamy is directing the next film with actor Adharva.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil