»   »  இனிகோ பிரபாகரனை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுப்பேன்! - சீனு ராமசாமி

இனிகோ பிரபாகரனை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுப்பேன்! - சீனு ராமசாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

இனிகோ பிரபாகரன்... எப்போதோ ஹீரோவாக முன்னணிக்கு வந்திருக்க வேண்டியவர்.. நான்கு நண்பர்களில் ஒருவராகவே நின்றுவிட்டார். இப்போது அவரை சோலோ ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. படத்துக்குப் பெயர் வீரையன்.

தொன்னூறுகளில் இந்தப் பெயரில் ரஜினி முன்பு நடிக்கவிருந்த ஒரு படம், கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்.

Seenu Ramasamy's promise to Inigo Prabhakaran

வீரையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கமலா தியேட்டரில் நடந்தது.

நிகழ்ச்சியில் இன்றைய இளம் இயக்குநர்கள் பலரும் பங்கேற்றது, இனிகோ பிரபாகரனின் நட்பு வட்டம் எத்தகையது என்பதைக் காட்டியது.

சீனு ராமசாமி, சற்குணம், தங்கசாமி, எஸ் ஆர் பிரபாகரன், எஸ்பிபி சரண் என பலரும் வந்திருந்து வாழ்த்தினர்.

இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், "இந்த மாதிரியான படங்கள்தான் தமிழ் சினிமாவில் பல புதிய சக்திகள் பிறக்கும் வழியை திறக்கின்றன. இனிகோ பிரபாகரன், தமிழ் சினிமாவில் இன்று இருக்கக்கூடிய முன்னணி கதாநாயகர்கள் அத்தனை பேருக்கும் நிகரான ஒரு நடிகர். எனக்கும் இனிகோ பிரபாகரனை வைத்து ஒரு படம் இயக்கும் ஆசை இருக்கிறது. கண்டிப்பாக அது நடக்கும்," என்றார்.

இயக்குநர் சற்குணம் பேசுகையில், "வீரையன்' பாடல்கள் யதார்த்தமாக இருக்கிறது. இந்த படத்தின் இயக்குநர் பரீத், மிகுந்த ரசனைக்காரர். இந்த கதையைச் சொன்னது போலவே எடுத்திருக்கிறார். சொந்தக் காசில் படம் எடுக்கிற தயாரிப்பாளர்கள், கதாநாயகர்கள்தான் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய மிகப்பெரிய கலைஞர்கள்," என்று கூறினார்.

வீரையன் படத்தை ஃபாரா சாரா பிலிம்ஸ் சார்பில் எஸ் பரீத் தயாரித்து இயக்கியுள்ளார்.

English summary
Director Seenu Ramasamy praises Inigo Prabhakaran and promised to direct a movie with him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil