»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

பார்த்திபனை விட்டுப் பிரிவது ஏன் என்பதற்கான காரணத்தை நடிகை சீதா விளக்கியுள்ளார்.

இருவருமே பரஸ்வரம் விவகாரத்து கேட்டு மனு செய்துள்ள நிலையில் இந்தப் பிரிவுக்கான காரணம் குறித்து சீதாகூறியதாவது:

என் பெற்றோரை எதிர்த்து பார்த்திபனை 100 சதவிதம் விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டேன். இத்தனைஆண்டுகள் குடும்பம் நடத்தினேன். எனக்கும் டிவி நடிகர் ஒருவருக்கும் ஏற்பட்ட காதல் தான் பார்த்திபனும் நானும்பிரிவதற்குக் காரணம் என்று பேசுவது தவறு. அது பார்த்திபனுடான என் 14 வருட வாழ்க்கையை கொச்சைப்படும்செயல்.

எங்கள் விவாகரத்துக்கு பல காரணங்கள் உண்டு . அவை எல்லாவற்றையும் என்னால் கூற முடியாது. கருத்துவேறுபாடுகள் எல்லை மீறிப் போனதால்தான் பிரிய வேண்டிய நிலை வந்துள்ளது.

ஆரம்பத்திலிருந்தேஎங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. அனைத்தையும் குடும்பம், குழந்தைகளுக்காகத் தாங்கிகொண்டேன்.

ஆனால் அவர் வேறு ஒரு நடிகையை (செளந்தர்யா?) திருமணம் செய்து கொள்வதில் பிடிவாதமாக இருந்தார். அதுகூடாது என்பதில் நானும் பிடிவாதமாக இருந்தேன். இது போல் இன்னும் ஏராளமான விஷயங்களைச்சொல்லலாம். ஆனால், நல்ல வேளை அந்த நடிகைக்கு வேறிடத்தில் திருமணமாகிவிட்டது.

நான் மீண்டும் நடிக்கிறேன் என்று சொன்ன போது, கூடாது என்று சொல்லி விட்டார். ஒரு கட்டத்தில் அவர்அத்துமீறிப் போகவும்தான் வேறு வழியில்லாமல் நான் மீண்டும் நடிக்க வந்தேன்.

என்னை பொறுத்த வரை யாரும் காதலிக்கலாம், கல்யாணமும் செய்துகொள்ளலாம். ஆனால் யாருக்காகவும் எந்தசூழலிலும் தொழிலை விட்டு விடக் கூடாது. அப்படி விட்டு விட்டால் பின் பரிதாப நிலைதான்.

இப்போது ஜெய் மற்றும் ஆஞ்சனேயா படங்களில் நடித்து கொண்டிருக்கிறேன். மற்றொரு டிவி மெகாசீரியலிலும் நடிக்க இருக்கிறேன். மேலும் 2 தெலுங்கு படங்களில் நடித்து கொண்டிருக்கிறேன். இனி யாரையும்சார்ந்து வாழும் அவசியமில்லை. என் மூத்த மகள் அபிநயா என்னுடன் இருக்கிறாள்.

நான் விரும்பும்போது அவர் வீட்டுக்கு சென்று கீர்த்தனாவையும், ராதாகிருஷ்ணனையும் பார்த்து விட்டு வருவேன்.பிரிவுக்கு முழு காரணம் பார்த்திபனின் நடத்தை தான்.

இவ்வாறு சீதா கூறினார்.

இவன் படத்தை பார்த்திபன் இயக்கியபோது, அதில் நடித்த செளந்தர்யாவுடன் காதல் மலர்ந்தது. ஆனால். இந்தக்காதல் நிறைவேறவில்லை. சமீபத்தில் ஒரு சாப்ட்வேர் என்ஜினியரை செளந்தர்யா மணந்தார்.

  • பார்த்திபன்-- சீதா "டைவர்ஸுக்கு" விண்ணப்பம்
Please Wait while comments are loading...