என்ன சொல்றீங்க.. சூர்யா 42 படத்தில் சீதா ராமம் ஹீரோயின் நடிக்கிறாங்களா? அதுவும் அந்த ரோலிலா?

சென்னை: இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் நடித்து வரும் சூர்யா 42 படத்தில் சீதா ராமம் படத்தில் நடித்த நடிகை நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த படத்தில் மிருனாள் தாகூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வரலாற்று படமாக உருவாகி வரும் சூர்யா 42 படத்தில் நடிகை மிருணாள் தாகூர் இணைந்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தம்பியை தொடர்ந்து அண்ணன்

தம்பியை தொடர்ந்து அண்ணன்

இயக்குநர் சிவா கார்த்தியின் சிறுத்தை படத்தை இயக்கியதில் இருந்தே சிறுத்தை சிவா என்றே இன்னமும் அழைக்கப்பட்டு வருகிறார். நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என 4 படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. சிறுத்தை படத்தையே முதலில் சூர்யாவை வைத்து இயக்க விரும்பிய சிவா சிறுத்தை படத்திற்கு பிறகு சூர்யாவை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்ற நிலையில், சூர்யா 42 படத்தை தற்போது இயக்கி வருகிறார்.

திஷா பதானி

திஷா பதானி

பிரம்மாண்டமாக உருவாகி வரும் சூர்யா 42 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பை படு வேகமாக நடத்தி வரும் இயக்குநர் சிறுத்தை சிவா இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

7ஆம் அறிவு மாதிரியா

7ஆம் அறிவு மாதிரியா

இந்த படம் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் நிலையில் படம் முழுக்க முழுக்க பீரியட் படம் இல்லை என்றும் 7ம் அறிவு படத்தை போல கொஞ்ச காட்சிகள் தான் பேக் ஸ்டோரியாக பீரியட் போர்ஷன் வரும் என்கின்றனர். ஹாலிவுட் ஸ்டன்ட் நடிகர்கள் பலரும் நடித்து வரும் இந்த படம் மகதீரா ஸ்டைலில் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீதா ராமம் ஹீரோயின்

சீதா ராமம் ஹீரோயின்

இந்நிலையில், கூடுதல் தகவலாக தற்போது இந்த படத்தில் சீதா ராமம் படத்தில் நடித்த நடிகை மிருணாள் தாகூர் இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. சூர்யாவின் நிகழ்கால போர்ஷனில் திஷா பதானியும், பீரியட் போர்ஷனில் சூர்யாவுக்கு ஜோடியாக மிருணாள் தாகூரும் நடிக்க உள்ளதாக கூறுகின்றனர். விரைவில் மிருணாள் தாகூர் ஆன்போர்ட் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அழகோவியம்

அழகோவியம்

துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சீதா ராமம் படத்தில் தனது 100 சதவீத பெஸ்ட் பர்ஃபார்மன்ஸை நடிகை மிருணாள் தாகூர் கொடுத்திருப்பார். ராணி கதாபாத்திரத்திற்கு அவர் கச்சிதமாக பொருந்துவார் என்பதால் சூர்யா 42 படத்தில் அவரை இறக்குமதி செய்துள்ளார் இயக்குநர் சிறுத்தை சிவா என்று கூறுகின்றனர்.

வாடிவாசலில் அவதார் டீம்

வாடிவாசலில் அவதார் டீம்

வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகிய நிலையில், சூர்யா 42, ரோலக்ஸ் என கவனம் செலுத்தி வரும் சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தையும் ஆரம்பிக்க போவதாக கூறுகின்றனர். மேலும், அதில், அவதார் படத்தில் பணியாற்றிய டெக்னிக்கல் டீம் சிலர் பணியாற்றப் போவதாகவும் லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X