»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பார்த்திபனைப் பிரிந்து வாழ்ந்து வரும் சீதாவுக்கும் டிவி நடிகர் ஒருவருக்கும் இடையே காதல் என்று வந்துள்ளசெய்திகளை சீதா மறுத்துள்ளார்.

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு ஓடி வந்து பார்த்திபனை ரகசிய திருமணம் செய்து கொண்டார்சீதா. இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். மேலும் ஒரு குழந்தையை தத்தெடுத்தும்வளர்த்தனர். இதில் கீர்த்தனா கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடித்தாள்.

இந் நிலையில் பார்த்திபனுக்கும், சீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்துஇருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

ஆழ்வார் திருநகரில் உள்ள பார்த்திபனின் சொந்த வீட்டில், குழந்தைகளுடன் சிலமாதங்கள் தங்கியிருந்தார்.

பின்னர் அந்த வீட்டை காலி செய்து விட்டு அவருடைய தாய் வீட்டுக்கு போய் விட்டார்.பார்த்திபன், கே.கே.நகரில் உள்ள தனது அலுவலகத்திலேயே தங்கி இருக்கிறார்.

இப்போது சீதா ஆழ்வார் திருநகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.மீண்டும் சினிமாவிலும் டிவி நாடகங்களிலும் நடிக்க ஆரம்பித்த சீதா மீது பல கிசுகிசுக்கள்.

தமிழ்ப் படங்கள் எடுத்து வரும் வட இந்தியத் தயாரிப்பாளரின் அன்புப் பிடியில் உள்ளார் என்று கூறப்பட்டது.இந் நிலையில் பிரம்மாண்டமான பங்களாவைக் கட்டி வருகிறார் சீதா. அந்த பங்களாவுக்கு டிவி நடிகர் சதீசுடன் சீதாஅடிக்கடி வந்து போகிறார்.

தனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் பேசப்பட்டது. ஆனால். இதை சீதா மறுத்துள்ளார்.

பெற்றோர் சொன்னதைக் கேட்காமல் என் சொத்துக்கள் எல்லாவற்றையும் பார்த்திபனுக்கே கொடுத்து விட்டேன்.கையில் காசே இல்லாமல் வெளியில் வந்தேன். தற்கொலை செய்து கொள்ளலாமா? என்று கூட யோசித்தேன்.ஆனால், குழந்தைகளுக்காக அந்த முடிவை மாறற்றினேன்.

சதீசும் நானும் சக டிவி நடிகர்கள், நல்ல நண்பர். எங்கள் இருவருக்கும் இடையே காதல் இல்லை. நட்புதான்.இன்னொரு திருமணம் பற்றி நான் யோசிக்கவே இல்லை. ஒரு முறை பட்டதே போதும், திருமண வயதை நான்தாண்டி விட்டேன். தெலுங்கு படங்கள் நிறைய செய்கிறேன். எல்லாவே அக்கா, அண்ணி, அம்மா வேடங்கள் தான்.நான் நடித்து சம்பாதிப்பது கூட குழந்தைகளுக்காகக் தான் என்று கூறியுள்ளார் சீதா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil