»   »  'நெருப்புடா' காமராஜ் எழுத, சிம்பு பாட, சேவாக் வெளியிட்ட 'ஆட்டைக்கு ரெடியா'? பாடல்

'நெருப்புடா' காமராஜ் எழுத, சிம்பு பாட, சேவாக் வெளியிட்ட 'ஆட்டைக்கு ரெடியா'? பாடல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் மதுரை சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் பாடலான ஆட்டைக்கு ரெடியாவின் வீடியோவை முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் வெளியிட்டார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் 27ம் தேதி துவங்கி நடக்க உள்ளது. இதில் தென் சென்னை, காஞ்சிபுரம், கோவை, மதுரை, திண்டுக்கல், திருவள்ளூர், தூத்துக்குடி, காரைக்குடி ஆகிய 8 அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் மதுரை சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், நடிகர் சிம்பு ஆகியோர் புதன்கிழமை அறிமுகம் செய்து வைத்தனர். அந்த நிகழ்ச்சியில் மதுரை அணியின் அதிகாரப்பூர்வ பாடல் வீடியோவை சேவாக் வெளியிட்டார்.

ஆட்டைக்கு ரெடியா என்று துவங்கும் அந்த பாடலை 'நெருப்புடா' பாடல் புகழ் அருண் காமராஜ் எழுத, சிம்பு பாட, தமண் இசையமைத்துள்ளார். மதுரைக்காரங்க பேச்சு வழக்கில் வெளியாகியுள்ள அந்த பாடல் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வீடியோவை பார்த்த மதுரைக்கார பசங்க எல்லாம் ஆட்டைக்கு ரெடியான்னு பாடிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சிம்பு மகிழ்ச்சியில் உள்ளார்.

English summary
Former cricketer Sehwag has introduced the anthem of Madurai Super Giants which is part of Tamil Nadu Premier League. Simbu has lent his voice for the anthem.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil