»   »  “குல்பி’யைத் தொடர்ந்து “சோல்பி’யுடன் செல்பி எடுத்த பார்த்திபன்!

“குல்பி’யைத் தொடர்ந்து “சோல்பி’யுடன் செல்பி எடுத்த பார்த்திபன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது மகள் கீர்த்தனாவுடன் எடுத்த செல்பியை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

செல்பி எடுக்காவிட்டால் சமுதாயத்தை விட்டே தள்ளி வைத்து விடும் அளவுக்கு நிலைமை சற்று மோசமாக உள்ள சமுதாயத்தில்தான் நாம் அனைவருமே வாழ்ந்து வருகிறோம்.

இந்த செல்பி மோகம் பிரபலங்களையும் கூட விட்டு வைத்ததில்லை. அவர்களும் செல்பி புள்ளைகளாகவே இருக்கிறார்கள்.

குஷ்புவுடன்...

குஷ்புவுடன்...

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இயக்குநர் பாக்யராஜ் மகனும், நடிகருமான சாந்தனுவின் திருமணத்தில் கலந்து கொண்ட பார்த்திபன், நடிகை குஷ்புவுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

செல்பி வித் குல்பி...

செல்பி வித் குல்பி...

அந்தப் புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்த பார்த்திபன், கூடவே, ‘செல்பி வித் குல்பி' என கூறியிருந்தார்.

குவியும் லைக்ஸ்...

குவியும் லைக்ஸ்...

இந்தப் புகைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் அதற்கு லைக் செய்திருந்தனர். கடந்த இரண்டு தினங்களில் சுமார் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் இந்த படத்தை லைக் செய்துள்ளனர்.

செல்பி வித் மை சோல்பி...

செல்பி வித் மை சோல்பி...

இந்நிலையில், தனது மகள் கீர்த்தனாவுடன் செல்பி ஒன்றை எடுத்து அதனையும் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படத்தை, ‘செல்பி வித் மை சோல்பி' எனத் தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

புதுமைப்பித்தன்...

புதுமைப்பித்தன்...

இந்தப் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்த சில மணிநேரங்களிலேயே இருபதாயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
அடுத்து என்ன செய்யப் போகிறாரோ இந்த புதுமைப் பித்தன்!

English summary
Actor and Director Parthiban Parthiban has released a selfie with her daughtter in facebook.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil