»   »  சுசித்ரா விவகாரம்.... செல்வராகவன், கீதாஞ்சலி ஆதரவு!

சுசித்ரா விவகாரம்.... செல்வராகவன், கீதாஞ்சலி ஆதரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அடுத்தடுத்து ஆபாச படங்கள், சர்ச்சை ட்வீட்டுகள் வெளியிட்டு தமிழ் சினிமாவை அதிரவைத்த சுசித்ராவுக்கு, மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கணவர் கார்த்திக் தெரிவித்துள்ளதையடுத்து, அவர்களுக்கு தங்கள் அனுதாபம் மற்றும் ஆதரவைத் தெரிவித்துள்ளனர் இயக்குநர் செல்வராகவனும் அவரது மனைவி கீதாஞ்சலியும்.

சுசித்ரா வெளியிட்ட சர்ச்சைக்குரிய ட்விட்களில் இயக்குநர் செல்வராகவனும் அவர் மனைவியும் இயக்குநருமான கீதாஞ்சலியும்கூட அடங்கும். ஆன்ட்ரியாவை நிர்வாணமாக படம் எடுத்தார் செல்வராகவன் என்று ஒரு மெயிலை வெளியிட்டிருந்தார் சுசி. ஆனாலும் சுசித்ராவின் நிலை அறிந்து தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்துள்ளனற்.

Selva, Geethanjali support Suchithra

இந்த விவகாரம் குறித்து இருவரும் பதிவிட்டுள்ள ட்விட்டில், சுசித்ராவின் கணவர் கார்த்திக்குக்குத் தங்கள் ஆதரவை அளித்துள்ளார்கள்.

செல்வராகவன்

"சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கணவர் கூறியுள்ளார். இதை நான் மதிக்கிறேன். எனவே எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. எனக்கு படங்கள் இயக்கவே பிடிக்கும். இந்தச் சூழலில் நான் மனிதனாக இருக்க விரும்புகிறேன்".

கீதாஞ்சலி

"சுசித்ரா மற்றும் அவர் கணவர் கார்த்திக்குக்கு எங்கள் அனுதாபங்கள். இது கடினமான காலம். அவருக்காக நான் இரக்கப்படுகிறேன். இந்தச் சமயத்தில் மிகவும் வலிமைமிக்கவர்களாக இருங்கள். அதில் குறிப்பிடப்பட்டுள்ள செல்வராகவன், தனுஷ் மற்றும் இதர நண்பர்கள் அனைவரும், கார்த்திக்கின் பின்னால் பக்கபலமாக உள்ளோம்."

English summary
Director Selvaraghavan and his wife Geethanjali have extended their support to Suchithra and her husband Karthik

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil