»   »  ப. பாண்டி படத்தை தனுஷ் குடும்பத்தை சேர்ந்த 'அவரே' இன்னும் பார்க்கவில்லையாம்!

ப. பாண்டி படத்தை தனுஷ் குடும்பத்தை சேர்ந்த 'அவரே' இன்னும் பார்க்கவில்லையாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ப. பாண்டி படத்தை தனுஷின் சகோதரரும், இயக்குனருமான செல்வராகவன் இன்னும் பார்க்கவில்லையாம்.

தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள ப. பாண்டி படத்தை பார்த்தவர்கள் அனைவரும் அவரை பாராட்டி வருகிறார்கள். முதல் படத்திலேயே கலக்கிட்டீங்க தனுஷ் என்று பிரபல இயக்குனர்கள் முதல் ரசிகர்கள் வரை கூறுகிறார்கள்.


இந்நிலையில் இது குறித்து தனுஷ் கூறும்போது,


இயக்கம்

இயக்கம்

படம் இயக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். படத்தை இயக்குவதற்கு முன்பு குறும்படங்களை இயக்கினேன். இயக்கத்தை கற்றுக் கொள்ள 17 குறும்படங்களை இயக்கினேன்.


ராஜ்கிரண்

ராஜ்கிரண்

திரைக்கதையை எழுதி முடித்த பிறகு எனக்கு பாண்டி கிடைக்கவில்லை. அந்த கதாபாத்திரத்திற்கு ஒருவரை எடுப்பது கடினமாக இருந்தது. வட சென்னை படப்பிடிப்பில் இருந்தபோது தான் ராஜ்கிரண் நினைவு வந்தது. அவரை விட வேறு யாராலும் பாண்டியாக நடிக்க முடியாது என்று தோன்றியது.


ரேவதி

ரேவதி

ரேவதி மேடம் படங்களில் நடிக்காமல் இருந்தபோதிலும் என் படத்தில் நடிக்க சம்மதித்தார். அவர் ஒன்றும் எனக்காக படத்தில் நடிக்கவில்லை. அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்ததால் நடித்தார்.


செல்வராகவன்

செல்வராகவன்

பாராட்டுவது


ப. பாண்டி 2

ப. பாண்டி 2

ப. பாண்டி 2 எடுக்கும் திட்டம் உள்ளது. ஆனால் அது எப்பொழுது நடக்கும், இல்லை நடக்குமா என்று எனக்கே தெரியாது. மீண்டும் படம் இயக்க நான் அவசரப்படவில்லை என்றார் தனுஷ்.


English summary
Dhanush said that his brother Selvaraghavan is yet to watch his directorial debut Pa. Paandi that hit the screens on april 14th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil