இது வேறலெவல் வெறியாட்டம்.. தம்பி தனுசுக்கு வில்லனாகிறாரா அண்ணன் செல்வராகவன்.. நானும் நடிப்பேன்!

சென்னை: கீர்த்தி சுரேஷ் உடன் சாணிக் காயிதம், விஜய் உடன் பீஸ்ட் என அடுத்தடுத்து வெள்ளித்திரையை வேட்டையாட காத்திருக்கும் ஜீனியஸ் இயக்குநர் செல்வராகவன் அடுத்ததாக தனது தம்பி தனுசுக்கு வில்லனாகவும் அவதாரம் எடுத்துள்ளார் என்றே தெரிகிறது.

தனது 45வது பிறந்தநாளை இன்று (மார்ச் 5) கொண்டாடி வருகிறார் செல்வராகவன். காலையிலிருந்தே ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் செல்வராகவனுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பிறந்தநாள் வாழ்த்துடன் பக்காவான நானே வருவேன் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

45வது பிறந்தநாள்

45வது பிறந்தநாள்

என் ராசாவின் மனசிலே, எட்டுப்பட்டி ராசா, துள்ளுவதோ இளமை, ட்ரீம்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் செல்வராகவன் 1977ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி சென்னையில் பிறந்தார். இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வரும் செல்வராகவனுக்கு கோலிவுட் திரையுலகமே வாழ்த்துக்களை சொல்லி வருகிறது.

நடிகராக

நடிகராக

இயக்குநராக காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமான செல்வராகவன் தனது தம்பி தனுஷை ஒரு சிறந்த நடிகனாக செதுக்கியவர் என்பவர் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில், தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் சிற்பியாக மாறியுள்ள செல்வராகவன் நாமும் நடிக்கலாமே என மேக்கப் போட்டு கேமாரவுக்கு முன்னால் களமிறங்கி இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் உடன்

கீர்த்தி சுரேஷ் உடன்

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தரமான சம்பவமாக உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தில் நடிகராக அறிமுகமாகி உள்ளார் இயக்குநர் செல்வராகவன். அந்த படத்தில் இவருடன் இணைந்து கீர்த்தி சுரேஷும் நடிப்பில் மிரட்டி எடுத்திருக்கிறார். விரைவில், அந்த படம் ரிலீசாக காத்திருக்கிறது.

விஜய்க்கு அண்ணனா

விஜய்க்கு அண்ணனா

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் செல்வராகவன் என தகவல்கள் முதலில் கசிந்த நிலையில், வில்லன் எல்லாம் கிடையாதுங்க, கேரக்டர் ரோல் தான் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஒரு வேளை விஜய்க்கு அண்ணனாக நடிக்கிறாரா? என்கிற டவுட்டுகளையும் ரசிகர்கள் கிளப்பி உள்ளனர்.

தனுசுக்கு வில்லனா

தனுசுக்கு வில்லனா

தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் டைட்டிலில் படம் இயக்கி வருகிறார் செல்வராகவன். இதுவரை தனுஷ் இருக்கும் போஸ்டர்கள் மட்டுமே வெளியான நிலையில், தற்போது செம மிரட்டலான லுக்கில் தனுஷ் உடன் உடைந்த ஜன்னல் கண்ணாடிக்கு பின்னாடியில் செல்வராகவனும் இருக்கும் புதிய போஸ்டரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஷேர் செய்து செல்வராகவனை வாழ்த்திய நிலையில், ரசிகர்கள் இந்த படத்தில் அப்போ தனுசுக்கு வில்லன் செல்வராகவன் தானா? வெறித்தனமாக இருக்கப் போகிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

யுவன் வாழ்த்து

யுவன் வாழ்த்து

அதற்கு ஏற்றார்போல இயக்கத்தில் சிகரம் தொட்ட செல்வராகவன் நடிப்பிலும் சிகரம் தொட வாழ்த்துக்கள் என வாழ்த்தி உள்ளார். அவரது ட்வீட்டை தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் செல்வராகவனுக்கு ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். செல்வராகவனும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து கொடுத்து ஏகப்பட்ட பாடல்கள் இன்னமும் இளைஞர்களின் எனர்ஜி டானிக்காக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X