இட்லி கடை: கண்கலங்க வெச்சிட்ட தம்பி.. செல்வராகவனின் நெகிழ்ச்சிப்பதிவு!

சென்னை: டான் பிக்சர்ஸ் மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ள இட்லி கடை படத்தை தனுஷி இயக்கி நடித்துள்ளார். இதில், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தனுஷ் இந்த படத்தை எழுதி இயக்கி, நடித்த படத்தை பார்த்த செல்வராகவன் நெகிழ்ந்து பாராட்டி உள்ளார்.

இட்லி கடை படத்தில், ராஜ்கிரண் ஒரு கிராமத்தில் இட்லி கடையை நடத்தி வருகிறார். இந்த கடையின் இட்லி மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கிறது. அதற்கு காரணம் இட்லிக்கு மாவு அரைப்பது, சட்னி, சாம்பார் என அனைத்தையும் பார்த்து பார்த்து செய்வது தான் ருசிக்கு காரணமாக உள்ளது. ராஜ்கிரண் நடத்தும் இட்லி கடை அந்த கிராமத்தின் அடையாளமாக இருக்கிறது. கிராமத்தில் எல்லோரும் இந்த கடைக்கு விரும்பி சாப்பிட வருகின்றனர். ராஜ்கிரணின் மகனான தனுஷுக்கு இந்த கிராமத்தை தாண்டி பல ஊர்களிலும் இட்லி கடையை திறக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், ராஜ்கிரண், வாழ் நாள் முழுவதும் இதே கிராமத்தில் இருக்க விரும்புகிறார்.

idli kadai Dhanush
Photo Credit:

இட்லிகடை : இதனால், தனுஷ் சென்னைக்கு வரும் தனுஷ், பின் வெளிநாட்டில், சத்யராஜுக்கு சொந்தமான மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்கிறார். இவரின் நடவடிக்கைகள் சத்யராஜுக்கு பிடித்து போக, தனது மகளான ஷாலினி பாண்டேவை திருமணம் செய்து வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடக்கிறது. பெரிய பணக்காரர்கள் அனைவரும் திருமணத்திற்கு அழைக்கப்படுகின்றனர். இந்த நேரத்தில் தனுஷின் தந்தையான ராஜ்கிரண் இறந்து விடுவதாக தனுஷுக்கு தகவல் வர, தனுஷ் இந்தியாவிற்கு வருகிறார். அப்பாவின் உடலை பார்த்த பிறகு, அப்பாவின் அரவாணப்பையும் அன்பையும் இழந்துவிட்டோமே என வருத்தப்படுகிறார். அப்பா இறந்த நான்கு நாட்களிலேயே அம்மாவும் இறந்துவிட அதே வீட்டில், தனியாக யாருமே இல்லாமல் அனாதையாக இருக்கும் தனுஷூக்கு, அப்பா நடத்தி வந்த இட்லி கடையை தொடர்ந்த நடத்த முடிவு செய்கிறார். அதன் பின் என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை.

வாழ்த்துக்கள் தம்பி: இதில் ராஜ்கிரண் அப்பாவாக வாழ்ந்து இருந்தார், அதே போல படம் பார்த்த பலர், சொந்த ஊரின் பெருமை, குல தெய்வ வழிபாடு என அனைத்தையும் தனுஷ் கண் முன் நிறுத்திவிட்டார் என படத்தை பாராட்டி வரும் நேரத்தில், தனுஷின் அண்ணனும், இயக்குநருமான செல்வராகவன் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிலேயே நிற்கும் ஒரு படம் இட்லி கடை. கருப்பு சாமியும் கன்றுக்குட்டியும் கண்களை கலங்க வைக்கின்றது. நமது ஊரையும் நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என்று இப்பொழுதுதான் புரிகின்றது. வாழ்த்துக்கள் தனுஷ் தம்பி என்று கூறியிருக்கிறார். அதோடு செல்வராகவன் போட்ட படத்தில் இட்லி கடை படத்தில் இடம்பெற்ற எத்தனை சாமி பாடலும் இடம்பெற்று இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X